PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, September 21, 2005

கனவைத் தேர்ந்தெடுங்கள்!

ஜெயமே ஜெயம் - 5
Image hosted by Photobucket.com
முதலில் நாம் கனாக் காண கற்றுக்கொள்ள வேண்டும்!

'என்னடா இது? வேலை வெட்டி இல்லாம சும்மா உக்காந்துகிட்டு கனவு காணச் சொல்றேன்னு' என்னை தப்பா நினைக்காதீங்க. வேலையோட வெட்டியோட கனவும் காணுங்கள்.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல், வெற்றித் தேவதையை காதலிப்போர்க்கு கனவு காண கசக்கவா செய்யும். கனவு இல்லாமல் காதலா?

என்ன நண்பர்களே! நான் சொல்ற கனவு வெற்றிக்கான கனவு..அதை விட்டு விட்டு முழுசா போர்த்தி படுத்துக்கிட்டு கண்ட கண்ட :)) கனவு கண்டீர்கள் என்றால் அதுக்கு நான் பொறுப்பில்லை! :(

இவ்வளவு சொல்றீயே! கனவுன்னா இன்னா? அதை முதல்ல சொல்லுன்னு சொல்றீங்களா!

ம்.ம்.. நம்ம வலைப்பதிவு நண்பர் சூப்பர்சுப்ரா கனவு பற்றி வித்தியாசமான உதாரணத்தோட தன் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். நான் சொல்லப் போவது அதில் இருந்தும் கொஞ்சம் மாறுபட்டது.

நமது ஐம்புலங்களும், சிந்தனையும் ஓய்வு எடுக்கும் நிலையைத்தான் தூக்கம் என்கின்றோம். Sound Sleep என்பார்களே, அப்படிபட்ட ஒரு அமைதியான தூக்கம். இந்நிலையில் கனவு என்பது ஏற்படாது.. (...ஹலோ நம்மில் பலர்க்கு SOUND SLEEP தான் இருக்கிறது :)) குறட்டை தூக்கம்)


ஐம்புலங்களில் ஏதாவது ஒன்று அல்லது பலது அல்லது சிந்தனை - இவை ஓய்வின்றி இருப்பின் எண்ண அலைகள், சலனத்தால் கனவைத் தோற்று விக்கின்றது.

கனவு காண்பவரின் கண்கள் மூடி இருந்தாலும், அவரது கருவிழி அசைவதை (Rapid Eye Movement) , இமை மூடி இருப்பினும் நம்மால் வெளியில் இருந்து பார்க்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டு அறிந்துள்ளனர்.

சிலர் கனவில் புலம்புவதும், கனவினால் அதிர்ச்சி அடைந்து திடீரென்று வீட்டில் உள்ள அனைவரும் அஞ்சும் வண்ணம் அலற வைப்பதும் நான் முன்பு சொன்னது போன்ற ஐம்புலங்களின் ஓய்வற்ற தன்மையைக் குறிக்கும.
இன்னும் விளக்கமாகப் பார்த்தால்.. சிந்தனைக்கும் புலன்களுக்கும் தொடர்புண்டு. இதை இப்படியும் சொல்லலாம் ..'சிந்தனைக்கும் செயல்களுக்கும் மிக்க தொடர்பு உண்டு'. சிந்தனையின் வடிவம்தானே செயல்.

நம் மனமானது எதையும் காட்சிகளாக அல்லது படங்களாகத்தான் பதிவு செய்கிறது. மனோவேகம் என்பார்களே..ஒரு நொடிக்குள் இந்த உலகை நம் சிந்தனையோடு சுத்தி வர முடிகிறது. சென்னையில் இருப்பவன் சிங்கபூரை நினைக்க முடிகிறது..அமரிக்காவில் இருப்பவன் தன் அத்திப்பட்டி காதலியை நினைக்க முடிகிறது.

இந்த சிந்தனையின் வேகம், ஒலி மற்றும் ஒளி இவற்றின் வேகத்தினைக் காட்டிலும் பலகோடி மடங்கு அதிகம்..இதை அளவிடவும் முடியாது. எனவேதான், இராமாயணத்தில் அனுமனைச் சொல்லும் போது மனோவேகத்தில் செல்பவன் என்று சொல்கிறார்கள்.. அதாவது நினைத்த மாத்திரத்தில் நினைத்தை இடம் செல்லுதல் என்பது ஆகும்..

ஆக, கனவு என்பது கண்ணை மூடிக்கொண்டு பார்க்கும் ஒரு சினிமா என்று சொல்லலாம். சிலருக்கு தான் கண்ட கனவு மறுநாள் காலையிலும் நினைவில் இருக்கும்..சிலருக்கு மறந்து போகும்..அது அவர்களின் ஞாபகச் சக்தியைப் பொருத்தது. பகல் தூக்கத்திலும் சிலர் கனவு காண்பது உண்டு. பிஞ்சு குழந்தைகள் கூட கனவு காண்கின்றது என்பதை மருத்துவ அறிவியல் கூறுகிறது.

எனவே, கனவு என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் வரக் கூடியது. சரி ..சரி..கனவை ஆராய்ந்தது போதும்! நான் சொல்ல வந்த கனவு எப்படிப் பட்டது என்பதை பார்ப்போமா!

கனவை நாம் எப்படி தேர்ந்து எடுக்க முடியும்? அது நம்மை அறியாமல் அல்லவா வரும். நிம்மதியான தூக்கம் அல்லவா உடலுக்கு நல்லது! இப்படி கனவே கண்டு கொண்டு இருந்தால் என்ன ஆவது? என்றெல்லாம் கேள்விகள் இங்கே எழக்கூடும்!கனவு தாமாக வருவதும் உண்டு. நாமாக வருவித்துக் கொள்வதும் உண்டு.

ஆங்கிலத்தில் Visuvalization என்று சொல்வார்கள். அதாவது காட்சிகளாக நம் மனத்திரையில் காணல்..நான் சொல்ல வந்த கனவு என்ன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ..இதைப் பற்றி மேலும் அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

ஜெயம் தொடரும்...

7 Comments:

  • At 1:10 PM, Blogger NambikkaiRAMA said…

    வெறுங்கை என்பது மூடதனம் விரல்கள் பத்தும் மூலதனம்.

     
  • At 4:14 AM, Blogger தாணு said…

    நான் கனவுக்கு கருவெல்லாம் ரெடி பண்ணியாச்சு. எப்படி அமல் படுத்தறதுன்னு சீக்கிரமே சொல்லுங்க.

    அத்திப்பட்டி காதலியின் ஆள் எந்த ஊரில் இருக்கார்ன்னு எனக்கு மட்டும் சொல்லிடுங்க!

     
  • At 12:05 PM, Blogger NambikkaiRAMA said…

    // எப்படி அமல் படுத்தறதுன்னு சீக்கிரமே சொல்லுங்க.//
    சொல்லிடுவோம்!

    //அத்திப்பட்டி காதலியின் ஆள் எந்த ஊரில் இருக்கார்ன்னு எனக்கு மட்டும் சொல்லிடுங்க//

    உங்களுக்கும் ஊருக்கும் மட்டுமே தெரிஞ்ச மாதிரி இந்த ரகசியத்தை சொல்லிடலாம்தான். ஆனால், அவன் என் பெண்டை கழட்டிடுவானே :))

     
  • At 1:32 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    ராமா நம்ம அப்துல் கலாமுக்கு ஒரு காப்பி அனுப்பி வைங்க........
    அவர் கனவும் உங்க கனவும் ஒத்துப் போகுதான்னு பாக்கலாம்.

     
  • At 1:36 PM, Blogger NambikkaiRAMA said…

    >அப்துல் கலாமுக்கு ஒரு காப்பி >அனுப்பி வைங்க........
    >அவர் கனவும் உங்க கனவும் ஒத்துப் >போகுதான்னு பாக்கலாம்.
    ஔஅனுப்பிடுவோம் கணேஷ்! அவரின் தனிப்பட்ட மின் அஞ்சல் முகவரி இருந்தால் தாருங்கள்.

     
  • At 8:18 PM, Blogger வீ. எம் said…

    //கண்ட கண்ட :)) கனவு கண்டீர்கள் என்றால் அதுக்கு நான் பொறுப்பில்லை! :(//

    ஓ! அப்போ நல்ல நல்ல கனவா கண்டா அதுக்கு மட்டும் நீங்க பொறுப்பா..அஸ்கு புஸ்கு!

    ராமா ,என்னப்பா , முதல்ல காதலிங்கனு சொன்னீங்க.. இப்போ கனவு கானுங்கனு சொல்றீங்க..
    இது வெற்றித்தொடரா, காதல் தொடரா, கனவுத்தொடர .. ^&^&^*^*:) :)

    சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..
    நல்லா போயிட்டு இருக்கு.. தொடரட்டும் உங்கள் கனவு... இல்லை இல்லை தொடர்..

    அப்புறம் கனவு தேர்ந்தெடுக்கறனோ இல்லையோ... உங்க பதிவுல அழகா தூங்கி கனவு கானுதே .. அந்த ..... பாப்பாவை.... அய்யோ நான் எதுவும் சொல்லல.. !

    கடந்த 10 நாட்களாக PMI sponsored project management meathodology என்கிற ஒரு full day training போயிருந்ததால் உங்கள் பதிவுகள் படித்து கருத்து போட முடியவில்லை..

     
  • At 1:37 PM, Blogger NambikkaiRAMA said…

    //இது வெற்றித்தொடரா, காதல் தொடரா, கனவுத்தொடர //
    கனவு இன்றி வெற்றி இல்லை.
    எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய். நன்றி வீ.எம்.

     

Post a Comment

<< Home