PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, July 30, 2005

இலைச் சேனல் செய்தியில்!!!

தமிழகத்தில் உள்ள குடும்பத் தொலைக்காட்சிங்க இரண்டும் ஒன்றை ஒன்று அடிச்சிக்கிட்டு போடுற செய்தி அலாதியாக இருக்கும் என்பதால் இந்த இரண்டு சேனல் செய்தியையும் நான் விடுவதில்லை. எனக்குப் பிடிச்ச காமெடி டைம் இந்த இலை மற்றும் சூரிய சேனல் செய்திகள்தான்.

நேற்று இலை சேனலில் ஒரு சுவையான செய்தி! "டாக்டர் ராமதாஸின் தமிழ்ப் பற்று வேஷம் ஆதாரத்துடன் அம்பலம்" என்பதுதான் தலைப்புச் செய்தி. ஆர்வத்துடன் டி.வி முன் அமர்ந்து கொண்டேன். விரிவான செய்தியில் " டாக்டர் ராமதாஸின் மகனும் அமைச்சருமான அன்புமணி தில்லியில் தன் குழந்தைகளை ஆங்கிலம் , இந்தி பயிற்று பள்ளியில் சேர்த்துள்ளார். இது அவர்களின் தமிழ் பற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.." என்றனர். நிருபர்கள் இது குறித்து அன்புமணியிடம் கேட்க. அன்புமணி அடிதடி மணி மாதிரி பதில் சொல்கிறார்" நான் வேணும்னா அந்த பள்ளியில் தமிழ் இருக்குதுன்னு சர்ட்டிபிகேட் வாங்கித்தரட்டுமா? அதை நீ டி.வியில் போடுறீயா? தில்லியில் இந்த பள்ளி தவிர வேறு எங்கும் தமிழ் இல்லை தெரியுமா?" என்ற படி முறைக்கிறார்.


பின்னர் அந்த நிருபர் அன்புமணி குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியைகள் மற்றும் மாணவியர்களிடம் தமிழ் பற்றி கேட்க. அவர்கள் " இந்தி, ஆங்கிலம், சமஷ்கிருதம் தவிர வேறு எந்த மொழியும் இங்கே கிடையாது" என்று பதில் சொல்கிறார்கள்.


தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் தில்லியில் பல ஆண்டுகளாய் தமிழர்பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களை படம் பிடித்து காட்டுகின்றனர்.


நான் இதைப் பதியக் காரணமே என்னை விழுந்து விழுந்து சிரிக்கச் செய்த ஒரு காட்சிதான்.. தொடர்ந்து படிங்க!

முக்கியக்காட்சி:
******************
அன்புமணி அலங்காரம் செய்யப்பட்ட கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு ஒரு பொன்மொழி எழுதுகிறார் தமிழில்..(நல்லா அதை வாசியுங்கள்)

"மரம் நடும் அரமே
மாபெறும் அமாகும்"

அதில் இந்த று மற்றும் எழுத்தை அன்புமணி எழுதும் போது இலை தொலைக்காட்சி ஒரு பின்னிசை கொடுத்தார்கள் பாருங்கள்...ஒரே சிரிப்புதான் போங்கள்.

வேண்டுகோள்:

1.தமிழகத்தின் ஒவ்வொரு கட்சியினரும் இந்த மாதிரி சொந்தமாக சானல் திறந்து..ஒருவரைப்பற்றி மற்றவர் காட்சி ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டால் நாடு நலம் பெறும்..என்னைப் போன்றோர்க்கு வலைப்பதிய செய்தியும் கிடைக்கும்.

2. என் தலைவன், என் கட்சி என்று அலையும் அன்பானத் தொண்டர்களே! உங்கள் தலைவர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.

Saturday, July 23, 2005

நம்பிக்கை!

ஒன்பது வாயில் கொண்ட
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!

Positive Thoughts Are the Wings of Success!
Image hosted by Photobucket.com

Thursday, July 21, 2005

ரஜினி.. ரஜினிதான்!

Image hosted by PositiveRAMA
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு வஞ்சமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையினில்
தோல்வியும் இல்லை!


(சந்திரமுகியின் 100 வது நாளை ஒட்டி ஒட்டப்பட்டு இருந்த இந்த வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்தது.)

Monday, July 18, 2005

டமிழ் வளர்க்கும் சானலில்!

நேற்று ஞாயிறு பாருங்கள்!..ஆபீசு போகத்தேவையில்லை..ஹையா! என்று சிறு பிள்ளைபோல் குதித்தெழுந்தேன். சரி கொஞ்சம் டி.வி சேனல் பக்கம் தலை வைப்போம் என்று. காலையிலேயே சூர்யனை பார்க்கும் முன்னே அதன் பெயர் ஒத்த சானலை ஆன் செய்தேன். பாட்டு, காலை வணக்கம் என்றபடி ..போய்கொண்டு இருந்தது.. சரி சரி என்றபடி அந்த குடும்ப சேனலின் மியூசிக் சேனலுக்கு மாற்றினேன்.

டமிழ் பண்பாட்டை பிரதிபலி(ழி)க்கும் நவநாகரீக மங்கை மற்றும் மங்கன்(ஆண்மகனைத்தான் அப்படி சொன்னேன்.) நிகழ்ச்சியை ஜென்டமிழில் தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள்..கீழே ஏதோ Flash news போலிருக்கு என்று உற்று நோக்கினேன்.

அப்புறமா பார்த்தா அது எல்லாம் SMS சேவையாம்.. ஒரு 3 டிஜிட் நம்பருக்கு நீங்க மெஜேஜ் அனுப்பினா அது இந்த குட்டித்திரையில் வருமாம். ..எப்ப வருதுன்னு பார்க்குறதுக்கு நீங்க கண்ணை 70mm சைஸ்ல விரிச்சி வைக்கனும்..கண்ணை மூடி விழிக்கிறதுக்குள் பல SMS வந்த வண்ணம் இருந்தது..அதில் இருந்து கொஞ்சம் சேம்பிள்தான் இங்கே தாரேன்..எப்படி இருக்குன்னு கருத்து சொல்லுங்கோ!

ranji : I luv u meenu.

jose : Hema kutty i luv u da.

prakash : I dedicate this song to my love sudha.

joy : Mams enkee poolaam innikki.

somu : I miss u chellam.

sanjay: Meenu i love you.

kuma: Rani, eppadi irukkee?

priya: I am missing you lot james!

Saru: Banukuttyma i love you da!

இன்னும் நிறைய நிறைய SMS வந்துட்டே இருந்தது. இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? இந்த SMS களை பார்க்கும்போது..எல்லாம் இந்த ஸ்கூல் (அ) காலேஜ் பசங்க அனுப்புற மாதிரிதான் இருக்குது. பெரும்பாலான SMS காதல் சம்பந்தப்பட்டதுதான். இது அவசியமா? ஆரோக்கியமா? ஏடா கூடாமான SMS ஐ தவிர்க்க ஏதேனும் செக்யூரிட்டீ ஆப்ஷன் வச்சிருக்காங்களா? விபரம் தெரிஞ்சவங்கோ இங்கோ கொஞ்சம் விளக்குங்கோ!