PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, May 28, 2005

வெற்றி நமதே!


*
முடியும் முடியும்
என்று சொன்னால்
உன்னால் முடியும் பாரடா!
*
விடியும் என்று
நம்பி இருந்தால்
நிச்சயம் விடியும் கேளடா!
*
உண்மை உழைப்பு
ஊக்கம் உயர்வை
உணர்ந்து நீயும் பாரடா!
*
காட்சி இனிக்கும்
கவலை பறக்கும்- கைக்
கொள்வாய் இதைக் கேளடா!
*
மரமாய் விலங்காய்
மண்ணில் மட்கிடவா
மானிடா நீயும் அவதரித்தாய்?
*
ஆறறிவு உடைய
மனிதா இதை
உணர்ந்தால் உனக்கே வெற்றியன்றோ!
*
அதிர்ஷ்டம் நம்பி
தினமும் வெம்பி
கரையேர நீ காத்திருந்தால்..
*
காலம் உன்னைக்
கொன்று விடும் – இது
ஞாலம் கண்ட உண்மையன்றோ!
*
வீணில் வெட்கி
தலை குனிந்திடவா- இவ்
விந்தையுலகில் நீ பிறந்தாய்?
*
மானிடம் தழைக்க
வந்தவன் நீ
மாபெரும் சாதனை ஆற்றிடவா!
*
இன்பம் துன்பம்
இரண்டையும் ரசிக்கும்
இதயத்தை நீ பெற்றிடுவாய்?
*
கோபம் என்னும்
கொடிய விஷத்தை
முழுமையாகக் கொன்றிடுவாய்?
*
வானம் போற்றும்
தலைவனாய் ஆக
வாலிபம் முதலே முயன்றிடுவாய்!
*
பேரும் புகழும்
உனக்கே சொந்தம்
பேரறிவாளனே வந்திடுவாய்!
*
சுதந்திர மூச்சை
சுவாசிப் பவனே
சுந்தரமானவன் நீ அன்றோ!
*
இம் மாபெரும் மண்ணில்
மகாத்மா ஆகி - வாழ்வதே
நமக்குப் பெருமையன்றோ!
*
ஆதலின் சீரிய
சிந்தனை கொண்டு - செயல்
ஆற்றிட நீ வா நண்பா!
*
வெற்றி! வெற்றி!
வெற்றி! என்றே
வெற்றி முழக்கம் செய்திடுவாய்!
*
நம்பி கை வை
நம்பிக்கை வை!
நிச்சயம் நமக்கே வெற்றியன்றோ!

*

Friday, May 06, 2005

பஜனைப் பாடல்

ஸ்ரீராமஜெயம்
என் சற்குரு ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகள் துணை!


#ராம சீதா, ராம சீதா ஆஞ்சநேயா!
ராமனையே நீ துதித்தாய் ஆஞ்சநேயா!
காகுத்தன் தூதனே ஆஞ்சநேயா!
கலியுக தெய்வமே ஆஞ்சநேயா!
வீர ஆஞ்சநேயா! ராம ஆஞ்சநேயா! பக்த ஆஞ்சநேயா!(ராம..)

#இராவணனை வதைத்திடவே ஆஞ்சநேயா!
இராமனுக்கு துணை நின்றாய் ஆஞ்சநேயா!
இலக்குவனின் உயிர்காத்தாய் ஆஞ்சநேயா!
இலட்சுமிக்கு மகன் ஆனாய் ஆஞ்சநேயா!(ராம..)

#பாரதப் போரினிலே ஆஞ்சநேயா!
பரந்தாமன் தேரில் நின்றாய் ஆஞ்சநேயா!
மாருதி பிரபுவே ஆஞ்சநேயா!
மங்கலம் நீ தருவாய் ஆஞ்சநேயா!(ராம..)

#அஞ்சனை செல்வனே ஆஞ்சநேயா!
அகிலந்தனைக் காத்திடுவாய் ஆஞ்சநேயா!
வஞ்சனை அறுத்திடுவாய் ஆஞ்சநேயா!
வானர வீரனே ஆஞ்சநேயா! (ராம..)

#பஞ்சமுகம் கொண்டவனே ஆஞ்சநேயா!
பக்தருக்கு அருள்புரிவாய் ஆஞ்சநேயா!
சஞ்சீவிராயனே ஆஞ்சநேயா!
சங்கடங்கள் போக்கிடுவாய் ஆஞ்சநேயா!(ராம)

#வெற்றிலை மாலை சூடும் ஆஞ்சநேயா!
வெற்றியைத் தந்திடுவாய் ஆஞ்சநேயா!
எத்திக்கும் உன் புகழே ஆஞ்சநேயா!
ராம ராம ராம ராம ஆஞ்சநேயா!
ராம நாமம் பாடிடுவோம் ஆஞ்சநேயா!(ராம..)
ஸ்ரீராமஜெயம்.