PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, July 30, 2005

இலைச் சேனல் செய்தியில்!!!

தமிழகத்தில் உள்ள குடும்பத் தொலைக்காட்சிங்க இரண்டும் ஒன்றை ஒன்று அடிச்சிக்கிட்டு போடுற செய்தி அலாதியாக இருக்கும் என்பதால் இந்த இரண்டு சேனல் செய்தியையும் நான் விடுவதில்லை. எனக்குப் பிடிச்ச காமெடி டைம் இந்த இலை மற்றும் சூரிய சேனல் செய்திகள்தான்.

நேற்று இலை சேனலில் ஒரு சுவையான செய்தி! "டாக்டர் ராமதாஸின் தமிழ்ப் பற்று வேஷம் ஆதாரத்துடன் அம்பலம்" என்பதுதான் தலைப்புச் செய்தி. ஆர்வத்துடன் டி.வி முன் அமர்ந்து கொண்டேன். விரிவான செய்தியில் " டாக்டர் ராமதாஸின் மகனும் அமைச்சருமான அன்புமணி தில்லியில் தன் குழந்தைகளை ஆங்கிலம் , இந்தி பயிற்று பள்ளியில் சேர்த்துள்ளார். இது அவர்களின் தமிழ் பற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.." என்றனர். நிருபர்கள் இது குறித்து அன்புமணியிடம் கேட்க. அன்புமணி அடிதடி மணி மாதிரி பதில் சொல்கிறார்" நான் வேணும்னா அந்த பள்ளியில் தமிழ் இருக்குதுன்னு சர்ட்டிபிகேட் வாங்கித்தரட்டுமா? அதை நீ டி.வியில் போடுறீயா? தில்லியில் இந்த பள்ளி தவிர வேறு எங்கும் தமிழ் இல்லை தெரியுமா?" என்ற படி முறைக்கிறார்.


பின்னர் அந்த நிருபர் அன்புமணி குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியைகள் மற்றும் மாணவியர்களிடம் தமிழ் பற்றி கேட்க. அவர்கள் " இந்தி, ஆங்கிலம், சமஷ்கிருதம் தவிர வேறு எந்த மொழியும் இங்கே கிடையாது" என்று பதில் சொல்கிறார்கள்.


தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் தில்லியில் பல ஆண்டுகளாய் தமிழர்பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களை படம் பிடித்து காட்டுகின்றனர்.


நான் இதைப் பதியக் காரணமே என்னை விழுந்து விழுந்து சிரிக்கச் செய்த ஒரு காட்சிதான்.. தொடர்ந்து படிங்க!

முக்கியக்காட்சி:
******************
அன்புமணி அலங்காரம் செய்யப்பட்ட கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு ஒரு பொன்மொழி எழுதுகிறார் தமிழில்..(நல்லா அதை வாசியுங்கள்)

"மரம் நடும் அரமே
மாபெறும் அமாகும்"

அதில் இந்த று மற்றும் எழுத்தை அன்புமணி எழுதும் போது இலை தொலைக்காட்சி ஒரு பின்னிசை கொடுத்தார்கள் பாருங்கள்...ஒரே சிரிப்புதான் போங்கள்.

வேண்டுகோள்:

1.தமிழகத்தின் ஒவ்வொரு கட்சியினரும் இந்த மாதிரி சொந்தமாக சானல் திறந்து..ஒருவரைப்பற்றி மற்றவர் காட்சி ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டால் நாடு நலம் பெறும்..என்னைப் போன்றோர்க்கு வலைப்பதிய செய்தியும் கிடைக்கும்.

2. என் தலைவன், என் கட்சி என்று அலையும் அன்பானத் தொண்டர்களே! உங்கள் தலைவர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.

7 Comments:

  • At 5:18 PM, Blogger NambikkaiRAMA said…

    அடடா பிந்திட்டேனே! ஆங்க்!

     
  • At 7:49 PM, Blogger சுட்டிப் பையன் said…

    தமிழ் மணத்தில் உங்கள் வலைப்பதிவில் எத்தனை பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளது என்பது காண்பிக்கப்படவில்லை. என்ன காரணம்? இந்த குறைபாட்டை சரி செய்யுங்கள்.

     
  • At 8:44 PM, Blogger NambikkaiRAMA said…

    சுட்டி காட்டிய சுட்டி பையனுக்கு நன்றி. தங்கள் வலைப்பக்கத்தில் பூ பூக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    அனாமதேயம் உங்களுக்கும் நன்றி!

     
  • At 1:25 AM, Blogger G.Ragavan said…

    அன்பும்(மணியும்) அரமும் உடைத்தாயின்
    தமிழ் வாழ்க்கை பண்பும் பயனும் அது.....

     
  • At 12:43 PM, Blogger NambikkaiRAMA said…

    ராகவன், கலக்கல் குறள்!

     
  • At 9:20 PM, Blogger Vinesh said…

    பார்க்கவில்லை..

    ஆனால் நீங்கள் எழுதியதை
    படித்தேன் ரசித்தேன்..

    Of course..

    விழுந்து விழுந்து சிரித்தேன் :-D

     
  • At 12:00 AM, Blogger வீ. எம் said…

    Ha Ha Super Positive Rama
    Sila kaaranangalukkaga thamizil ezhudha mudiyavillai ..adhigamagavum ezhudha mudiyavillai..
    viraivil ezhudhugiren.

    appuram en valai poovil kataisi iraNdu pathivai vandhu paarkavillaiya?? yen?

    V. M

     

Post a Comment

<< Home