PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Monday, July 18, 2005

டமிழ் வளர்க்கும் சானலில்!

நேற்று ஞாயிறு பாருங்கள்!..ஆபீசு போகத்தேவையில்லை..ஹையா! என்று சிறு பிள்ளைபோல் குதித்தெழுந்தேன். சரி கொஞ்சம் டி.வி சேனல் பக்கம் தலை வைப்போம் என்று. காலையிலேயே சூர்யனை பார்க்கும் முன்னே அதன் பெயர் ஒத்த சானலை ஆன் செய்தேன். பாட்டு, காலை வணக்கம் என்றபடி ..போய்கொண்டு இருந்தது.. சரி சரி என்றபடி அந்த குடும்ப சேனலின் மியூசிக் சேனலுக்கு மாற்றினேன்.

டமிழ் பண்பாட்டை பிரதிபலி(ழி)க்கும் நவநாகரீக மங்கை மற்றும் மங்கன்(ஆண்மகனைத்தான் அப்படி சொன்னேன்.) நிகழ்ச்சியை ஜென்டமிழில் தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள்..கீழே ஏதோ Flash news போலிருக்கு என்று உற்று நோக்கினேன்.

அப்புறமா பார்த்தா அது எல்லாம் SMS சேவையாம்.. ஒரு 3 டிஜிட் நம்பருக்கு நீங்க மெஜேஜ் அனுப்பினா அது இந்த குட்டித்திரையில் வருமாம். ..எப்ப வருதுன்னு பார்க்குறதுக்கு நீங்க கண்ணை 70mm சைஸ்ல விரிச்சி வைக்கனும்..கண்ணை மூடி விழிக்கிறதுக்குள் பல SMS வந்த வண்ணம் இருந்தது..அதில் இருந்து கொஞ்சம் சேம்பிள்தான் இங்கே தாரேன்..எப்படி இருக்குன்னு கருத்து சொல்லுங்கோ!

ranji : I luv u meenu.

jose : Hema kutty i luv u da.

prakash : I dedicate this song to my love sudha.

joy : Mams enkee poolaam innikki.

somu : I miss u chellam.

sanjay: Meenu i love you.

kuma: Rani, eppadi irukkee?

priya: I am missing you lot james!

Saru: Banukuttyma i love you da!

இன்னும் நிறைய நிறைய SMS வந்துட்டே இருந்தது. இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? இந்த SMS களை பார்க்கும்போது..எல்லாம் இந்த ஸ்கூல் (அ) காலேஜ் பசங்க அனுப்புற மாதிரிதான் இருக்குது. பெரும்பாலான SMS காதல் சம்பந்தப்பட்டதுதான். இது அவசியமா? ஆரோக்கியமா? ஏடா கூடாமான SMS ஐ தவிர்க்க ஏதேனும் செக்யூரிட்டீ ஆப்ஷன் வச்சிருக்காங்களா? விபரம் தெரிஞ்சவங்கோ இங்கோ கொஞ்சம் விளக்குங்கோ!

16 Comments:

  • At 2:01 PM, Blogger Alex Pandian said…

    நானும் இதனைக் கவனித்தேன். என்னளவில் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாக இது தெரிகிறது. கன்னட உதயா டிவியிலும் இதே கதை நேற்று. சில இளைஞர்கள் அனுப்பும் செய்திகள் மிகவும் மோசமாகவும் உள்ளது. இதில் மாடரேஷன் உள்ளதா என தெரியவில்லை. பொறுக்கி என்ற வார்த்தையெல்லாம் அதில் வந்தது.

    - அலெக்ஸ்

     
  • At 2:09 PM, Blogger NambikkaiRAMA said…

    உங்களது கருத்தை ஆமோதிக்கிறேன் அலெக்ஸ்.

     
  • At 2:39 PM, Blogger அன்பு said…

    அன்புக்குரிய ராமா...

    உங்கள் பதிவின் கவலை

    1) "டமிழ் வளர்க்கும் சானல்!" பற்றியதா? அல்லது
    2) வீணாப்போகும் அந்த இளைய சமுதாயம் சார்ந்ததா?

    1) என்றால் இந்தப் பதிவில் உள்ள ஆங்கில (அல்லது தமிழ்) சொல்களை எண்ணிப்பாருங்கள்... அது உங்களுக்கு மட்டுமல்ல என்மீதும் அந்த குறை உண்டு. அதே ஒளிவழியில் ஒருமுறை நடந்த நேர்காணலில், அந்த பெண்மணிய் அய்யா, அய்ய என்று விழிக்க... இறுதியில் வந்திருந்த பிரபலம் "அய்யா... அய்யா..ன்னு சொல்லி என்னா பெருசா... ஆக்கிட்டீங்க" என்று வருத்தப்பட்டார்.

    2) என்றால்... அந்த அசிங்கம் இங்கு நடக்கிறது. தமிழ் ஒளிவழியில் காதலைச்சொல்வதும் இன்ன பிற வழிசல்களும், அம்மாவிடம் மன்னிப்பு கேட்டும் குறுந்தகவல் இங்கும் வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவங்கள் காசுபார்க்க இது ஒரு வழி (ஒரு தகவல் அனுப்ப 90 காசுகளுக்கும் மேல் - 18 வயதாயிருக்க வேண்டும் என்று ஒரு மட்டுறத்தல் தக்வலாக மட்டும் வரும்) - அது தெரியாமல் கண்டத அனுப்புறாங்க... வருத்தமாத்தான் இருக்கிறது.

     
  • At 3:05 PM, Blogger NambikkaiRAMA said…

    அன்பு உங்கள் கேள்வி நியாயமானதே!
    தலைப்பில் ஒரு "லி" தவறிவிட்டது.
    நீங்கள் கேட்டபடி இரண்டையும் பற்றியதே..(நாங்கள்தான் தமிழை காக்கிறோம்..என்று மார்தட்டுபவர்களை சற்று தட்டுவதற்காகத்தான் அப்படி ஆங்கிலக் கலப்பில் எழுதினேன். நான் ஒன்றும் தமிழ் தீவிரவாதி அல்ல. கருத்தை சொல்பவர்கள் அதை கடைபிடிக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் என் வேதனை? அதன் வெளிப்பாடுதான் இந்த த(ட)மிழ்..இனி தலைப்பை மிகப் பொருத்தமாக குழப்பாமல் வெளியிடுகிறேன்.

    மிக்க நன்றி!

     
  • At 5:30 PM, Blogger வீ. எம் said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 5:31 PM, Blogger வீ. எம் said…

    பா. ராமா,

    ///ஏடா கூடாமான SMS ஐ தவிர்க்க ஏதேனும் செக்யூரிட்டீ ஆப்ஷன் வச்சிருக்காங்களா///அதெல்லாம் ஒரு கன்றாவியும் கிடையாது.. இதுல 90 சதிகவிதம் டுபாகூர் sms என நினைக்கிறேன்.. !
    யாரே பெயரில் யாரோ அனுப்புவதாகவும் இருக்கலாம்..

    தமிழ் வளர்போம்.. கலாச்சாரம் காப்போம்னு சொல்றதெல்லாம் சும்மா,
    வாழ்த்தலாம் வாங்க.. நன்பருக்கு வாழ்த்து அது இது அப்படினு பல நிகழ்ச்சி..இது இல்லாம இந்த sms வாழ்த்து எதுக்கு?
    எல்லாம் வியாபாரம்.. என்ன பன்றது..
    வீ. எம்

     
  • At 6:47 PM, Blogger NambikkaiRAMA said…

    வீ.எம்..உங்க கருத்து மிகவும் கவனிக்க தக்கதே!

     
  • At 5:28 PM, Blogger NambikkaiRAMA said…

    அடக்கடவுளே! அதுவும் தமிழ் சேனலில்தானா?

     
  • At 7:35 PM, Blogger jeevagv said…

    இங்கே அமெரிக்காவில் கூட இன்னமும் SMS அந்த அளவு பிரபலமாகவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன்! - இங்கே SMS அனுப்ப வேண்டுமென்றால் (உள்ளூர் உட்பட) பணம் செலவாகும் என்பதே முக்கியமான காரணமாகும்.

    உங்கள் பதிவுகளில் சில பார்த்தேன், நன்றாக உள்ளது ராமா.

     
  • At 6:01 PM, Blogger NambikkaiRAMA said…

    //இங்கே அமெரிக்காவில் கூட இன்னமும் SMS அந்த அளவு பிரபலமாகவில்லை //

    நம்ம அளவிற்கு அவங்க முன்னேற வில்லை போலும்(ஹா..ஹா)

     
  • At 8:19 PM, Anonymous Anonymous said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 9:58 PM, Blogger Sud Gopal said…

    சென்னப் பட்டினத்தில SMS இலவசமாய் இருக்கரதினால தான் இந்த மாதிரி செல் இருக்கிற எல்லாரும் இம்சை படுத்திட்டு இருக்காங்க.

    ஆனா அந்த்க் குறிப்பிட்ட சேனலில் வரும் அறிவிப்பாளர்கள் நிரயப் பேரு செரியான பெனாத்தல் கேசுங்க.என்ன பேசரதுன்னே தெரியாம உளரிக் கொட்டிட்டு இருப்பாங்க.இந்த உளரல்களுக்கு அந்த SMS பரவால்லைன்னு தோணுது.

    அதனால இப்போ அந்தச் சேனல் போனா நான் விரும்பிப் படிக்கரது இந்த குறுந்தகவல்கள்தான்.

    கீப் இட் அப் பாஸிட்டிவ் ராமா...

     
  • At 4:42 AM, Blogger யாத்ரீகன் said…

    தமிழ் வளர்ப்போம் எனக்கூறுபவர்களின் குடும்பத்தொல்லைக்காட்சியின் பெயர் "சன் டிவி",
    மூட நம்பிக்கை வளர்ப்போம் , மன்னிக்கவும் , மூட நம்பிக்கை அழிப்போம் என முழக்கமிடும் கட்சியின் குடும்பப்பத்திரிக்கையின் பெயர் "குங்குமம்"

    வாழ்க தமிழக மக்கள்

     
  • At 3:11 PM, Blogger NONO said…

    இங்கையும் (Sweden) அந்த கூத்த உண்டு!! இதில் குறை கூற பெருசா ஒன்றும் இல்லை என்றே எனக்கு படுகின்றது!!!(நானும் அடிக்கடி எழுதி அனுப்பியிருந்த படியால் ;-) என்ன தமிழ் சேவையில் தமிழ் எழுத்திலே எழுதி ஊக்கிவிக்கலாம்... அதவது ஆங்கில எழுத்து இல்லம தமிழ் எழுத்தையே பாவிக்கலாம்..!

     
  • At 9:27 AM, Blogger அ. பசுபதி (தேவமைந்தன்) said…

    பாராட்டுகள்! இது தொடர்பாக இன்னும் விரிவாக நீங்கள் சிந்திக்க முடியும். காம்ப்பியர்களின் மொழிநடை, உடை, பாவனை எல்லாம் ஒரு திட்டவட்டமான சுற்றுக்குள் இயங்குவதன் காரணம் என்ன?
    அ.பசுபதி
    (தேவமைந்தன்)

     
  • At 12:46 PM, Blogger NambikkaiRAMA said…

    பசுபதி தாங்கள் சரியான கேள்வி எழுப்பி உள்ளீர். என் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி!

     

Post a Comment

<< Home