PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, June 24, 2005

வெற்றி முழக்கம்!!!

Image hosted by Photobucket.com
0
உச்சிமுதல் பாதம் வரை
உள்ளிருக்கும் நரம்பு எல்லாம்
உச்சரிக்கும் வார்த்தை - அது
வெற்றி என்றே செய்திடுவாய்!

0

இச் செகத்தில் உள்ளவர்கள்
ஏளனம் உனை செய்திடினும்
துச்சமென நீ கருதி
பாரதியாய் துணிந்திடுவாய்!

0

தனிமையில் சிந்தனை கொள்!
தக்கதொரு லட்சியம் கொள்!
தலைவனாய் நீ உயரத்
தகுதியை வளர்த்துக் கொள்!

0

பாதங்கள் தயார் ஆனால்
பாதைகள் மறுப்பதேது?
வெற்றிமகள் உனை வந்து
அண்டிடுவாள் அணைத்துக் கொள்!

0

உன்னில் உள்ள கசடுகளை
ஒவ்வொன்றாய் வெளியேற்று
வெற்றிச் சிந்தனையை -தினம்
இதயத்தில் உரம் ஏற்று!

0

வானம் இருளும் போது
விண்மீன்கள் வலம் வரும்,
வாழ்க்கை இருண்டாலும்
கவலை வேண்டாம் வசந்தம் வரும்!

0

நெருக்கடிக்கு இடையேதான்
நெசமான வெற்றி உண்டு!
நெடுந் துயர் வந்திடினும்
கவலை வேண்டாம் கடந்துபோ!

0

தடையின்றி பெற்ற வெற்றி
தன்னிறைவாய் இருப்பதில்லை!
தமிழா நாளைத் தலைவா - நீ
விழித்துக் கொள் வெற்றிகொள்ள!

0

இமயத்தில் ஏறும் போது
சறுக்கல்கள் சாதாரணம்!
சிகரத்தை தொடும்போது- உன்
சிரமமெல்லாம் பறந்து போகும்!

0

இதயத்தில் இதை நிறுத்து
இயன்றவரை முயற்சி செய்!
கடமையே கருத்தாய் ஆயின்- உனக்கு
கட்டாயம் ஜெயம் அன்றோ!

0

5 Comments:

  • At 1:33 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    // தடையின்றி பெற்ற வெற்றி
    தன்னிறைவாய் இருப்பதில்லை!
    தமிழா நாளைத் தலைவா - நீ
    விழித்துக் கொள் வெற்றிகொள்ள! //

    // இமயத்தில் ஏறும் போது
    சறுக்கல்கள் சாதாரணம்!
    சிகரத்தை தொடும்போது- உன்
    சிரமமெல்லாம் பறந்து போகும்! //

    கலக்கிட்டீங்க ராமா...... உண்மையிலேயே "பாஸிட்டிவ்" ராமா தான்...
    தங்கள் கவிதையைப் படித்த பொழுது எனக்கு ஒரு ஆங்கில மேற்கோள் ஞாபகம் வந்தது... "change is a minute decision, but a life time commitment"

     
  • At 1:48 PM, Blogger NambikkaiRAMA said…

    //"change is a minute decision, but a life time commitment//
    கரெக்டா சொன்னீங்க கோ.கணேஷ்..
    உங்க முகம் கூட பாஸிடிவ் லுக்காதான் இருக்கு. விமர்சனத்திற்கு நன்றி!

     
  • At 7:56 AM, Anonymous Anonymous said…

    ராமா, பதிவு அருமை. நேர்முக சிந்தனை உங்கள் கவிதையில் பளிச்சிடுகிறது. தனி மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். பதில் விரைவில் எழுதுகிறேன்.

     
  • At 2:11 PM, Blogger வீ. எம் said…

    நல்ல கவிதை.. தன்னம்பிக்கை தரும் வரிகள்... !
    என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
    //இமயத்தில் ஏறும் போது
    சறுக்கல்கள் சாதாரணம்!
    சிகரத்தை தொடும்போது- உன்
    சிரமமெல்லாம் பறந்து போகும்!
    //

    அப்புறம் என்ன பா.ராமா வலைப்பூ பக்கம் கொஞ்சம் நாள் வரலை போல.. கனேஷ், பாலா, குழலி எல்லோருமே அப்படித்தான்.. நடமாட்டம் அவ்வளவா இல்லை.. !
    எனக்கும் இங்கே கொஞ்சம் வேலை அதிகம்.. அவ்வளவா வலைப்பூக்கு நேரம் ஒதுக்க முடியலை..
    சென்னை வந்த பிறகு தான் மறுபடியும் ஆரம்பிக்கனும்..

    வீ எம்

     
  • At 3:49 PM, Blogger NambikkaiRAMA said…

    விமர்சனத்திற்கு நன்றி வீ.எம், ஜான்!
    நீங்க சொன்ன மதிரி வலைப்பூ பக்கம் ரொம்பவே மிஸ் பண்ணுறேன். வேலைப்பளுதான் காரணம்.

     

Post a Comment

<< Home