PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, August 20, 2005

தனித்து நில்லுங்கள்!

ஜெயமே ஜெயம் - 2
வெற்றித் தேவதையை இந்நேரம் எல்லோரும் காதலிக்கத் தொடங்கி யிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி விசயத்திற்கு வருகிறேன்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று சந்தேகம் ஏற்பட்ட பாண்டிய மன்னனுக்கு மீண்டும் ஒரு சந்தேகம் எழுந்தது. உடனே தனது நெருக்கமான மந்திரியை அழைத்தார். "மந்திரியாரே, நான்
இந்த நாட்டையே ஆளுகின்ற அரசன்..ஆனால் எனது வீட்டை ஆள முடிய வில்லையே.. அல்லி ராஜ்யம் அல்லவா என் வீட்டில் நடக்கிறது ..உமது வீட்டில் எப்படி? " என்று கேட்டார். அதற்கு மந்திரியாரும் ,"அரசே! வீட்டிற்கு வீடு வாசல் படிதான் " என்றார்.

அரசரால் இதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை, "நமது நாட்டில் திருமணமான எல்லா ஆண்களும் பெண்களுக்கு அடிமையா? ஒருபோதும் இருக்காது. நிச்சயம் பல ஆண்சிங்கங்கள் இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் துணிச்சலுக்கு நான் பரிசு வழங்கப்போகிறேன்" என்றபடி அந்த நாட்டில் உள்ள திருமணமான இளையவர் முதல் முதியவர் வரை அனைவரும் அரசின் பிரதான மைதானத்தில் கூடும் படி அறிவிப்புச் செய்தார்.
அனைத்து ஆண்களும் மைதானத்தில் கூடினர். ஒருவரை ஒருவர் மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டனர். அரசர் மாடத்திற்கு வந்தார். கூட்டத்தினை நோக்கி, " மனைவி சொல்லையே கேட்டு நடப்பவர்கள் என் இடது கை பக்கம் வாருங்கள், மற்றவர்கள் எனது வலது கை பக்கம் வாருங்கள்" என்று உரக்கச் சொன்னார்.

கூட்டதில் சலசலப்பு ஏற்பட்டு அரசர் சொன்னபடி செய்தனர். அரசரின் இடது கைப்பக்கம் அவ்வளவுபேரும் வந்துவிட்டனர். ஒரே ஒருத்தன் மட்டும் வலது கைபக்கம் நின்று கொண்டு இருந்தான்.

அரசனுக்கோ பெரும் மகிழ்ச்சி.. அப்பாடா! இவன் ஒருத்தனாவது நமது ஆண் வர்க்கத்தின் மானம் காத்தானே என்று அழைத்து அவனுக்கு பொன்னும் பொருளும் வாரி வாரி வழங்கினான். அந்த மனிதனோ செய்வதறியாது தவித்தான். மந்திரியார் அவனைக்கண்டு ஆச்சரியப்பட்டு போனார். " ஏனப்பா! ஊரே ஒருபக்கம் கூடி நிற்கும் போது..நீ மட்டும் தனியாக எதுக்குப்பா நின்னே?" என்று கேட்டார்.

அதற்கு அவன் ,"மாண்பு மிகு மந்திரியாரே, என் மனைவி கூட்டமாக உள்ள இடங்களில் நிற்காதே என்று சொல்லியுள்ளாள்" என்றானே பார்க்கலாம் :))

ம்..ம். நான் சொல்ல வந்த தனித்து நில்லுங்கள் என்பது இதுவல்ல.

பின் எதுவாம் என்று கேட்கிறீர்களா?

தனித்து நில்லுங்கள் என்றால் தனித்துவமாய் இருத்தல் அல்லது வித்தியாசப்பட்டு இருத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

பஸ் ஸ்டாப்பில் , பீச்சில், பார்க்கில், கல்லூரி அருகில் சிலரை நாம் இப்படி பார்த்திருப்போம். "தலை முடியை அந்நியன் (விக்ரம் கோபிச்சுக்கப் போறார்) போல் வளர்த்து இருப்பார்கள். கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து இருப்பார்கள். மற்றவர்களை கவர்ந்திட வேண்டும் என்று விதவிதமான சேட்டைகள் (லொள்ளு+ ஜொள்ளு) செய்வார்கள். வித்தியாசமான வாகனத்தில் மிகமிக வேகமாக காற்றைக் கிழித்துச் செல்வார்கள். இதெல்லாம் நான் சொல்ல வந்ததிற்கு உதாரணமாய்க் கொள்ள முடியுமா?

சமீபத்தில் கூட ஒரு தொலைக்காட்சி செய்தியில், மாணவர்களின் கல்வி இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு மாணவர்கள் தீக்குளிக்க முற்பட்டதையும் அதைக் காவலர்கள் தடுத்ததையும் காட்சிகளாகக் கண்டிருப்பீர்கள். இதைப்போன்று கட்சிக்காக தீக்குளிக்கும் தொண்டர்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்தமாதிரி செய்யும் முட்டாள்தனங்கள் எல்லாம் வித்தியாசப்படுதல் என்பதற்கு உதாரணமாகுமா? நிச்சயம் இல்லை. இவையெல்லாம் விளம்பரப் பிரியத்தால் செய்யப்படுபவை. தான் எப்படியாவது மக்கள் மத்தியில் செய்தியாகிவிட வேண்டும் என்ற வெறித்தனத்தில் செய்யப்படுபவை. ஒருவித மனோவியாதி!

அப்படியானால் "தனித்து நில்லுங்கள்" என்ற தத்துவத்தின் பொருள் என்ன?

மற்றவரிடம் இருந்து சற்று வித்தியாசப்படுதல். அது உங்களின் அணுகுமுறையைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்? நாலுபேர் சந்திக்கும் இடத்தில், சந்தித்து திரும்பும் போது, உங்களைச் சந்தித்தவர்கள் உங்களைப் பற்றி சிந்திக்கும் படி ( நேர்மறையான முறையில்) இருக்கவேண்டும்.

"பாலாவா அவன் Great ப்பா , அவன் ஒரு வித்தியாசமானவன்பா"

"யாரு நம்ம சுரேஷா! அவன் என்ன சொன்னாலும் கரெக்ட்டா இருக்கும்."

"நம்ம கோபி மாதிரி வருமா?"

"ஜோதி - ஐ பார்த்தாலே கையெடுத்து கும்பிடுனும்போல இருக்கும்."

"சூப்பர் ஸ்டாருன்னா சூப்பர்ஸ்டாருதான் அவரு ஸ்டைலே கலக்கல்"

" நம்ம தலைவர் போல வருமா அவரு பேசுற தமிழே தனி - ப்பா"

" அவன்கிட்ட ஏதோ ஒரு ஃபயர் இருக்கு? அதான் ஜெயிச்சுக்கிட்டே இருக்கான்"

"நம்ம சுஜாதா என்னம்மா எழுதுறாரு"

இந்த மாதிரியான வாசகங்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவற்றை ஆற அமர சிந்தித்தால் "தனித்து நில்லுங்கள்" என்று நான் சொல்ல வந்ததின் பொருள் புரிய ஆரம்பித்திருக்கும்.

ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற மனிதர்களை அலசிப்பாருங்கள். அவர்கள் தனித்து நின்றிருப்பார்கள். தங்களின் தனித்துவத்தாலே மாபெரும் வெற்றியைப் பெற்று இருப்பார்கள்.

"அய்யகோ! நான் எப்படி தனித்துவமாய் விளங்குவது?" என்று சோர்ந்துவிட வேண்டாம். நல்ல அமைதியான சூழலில் நமது ஆழ்மனதினை தூண்டினால் நம்மிடம் இருக்கும் தனித்துவம் நமக்கு புலப்படும்.

அது என்ன ஆழ்மனம்?

மொத்தம் மூன்று மனங்கள் உள்ளன. சிலருக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும். ...ப்பூ இதத்தானே சொல்லப்போரே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப்பட்டோருக்கு எனது கேள்வி "எத்துணை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள்?" என்பதுதான்.

"அட போப்பா எனக்கு இருக்குறதே ஒரே ஒரு மனசுதான் அதையும் நீ வெற்றித்தேவதையை காதலி காதலின்னு சொன்னீயே..அதான் அவக்கிட்ட கொடுத்துட்டேன் என்கிறீர்களா? :))

அப்படியானால் உங்களுக்கு இனி ஜெயம்தான்!

அடுத்த ஜெயத்தில் சந்திப்போமா :-)

7 Comments:

  • At 4:41 PM, Blogger supersubra said…

    இந்த்க்கதைக்கு மற்றொரு முடிவும் உண்டு.

    மந்திரியார் அவனைக்கண்டு ஆச்சரியப்பட்டு நீ மனைவி சொல்லை கேட்பதில்லையா என்ற போது அவன் சொன்னான் வலது பக்கம் போகவேண்டுமா கூடாதா என்பதை மனைவியைக் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும். அவள் இன்னும் இங்கே வரவில்லை என்றானாம்.

     
  • At 4:57 PM, Blogger பத்ம ப்ரியா said…

    Hi

    Good Essay.. thought provoking lines and words..Thiyana will provoke the inner mind which creates the individualism..Am I right?

     
  • At 5:08 PM, Blogger NambikkaiRAMA said…

    super subra உங்க கதையும் super தான். என் வலைப்பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி.

    சிறகுகள் அன்பரே! உங்கள் கருத்து உண்மையே!

     
  • At 5:37 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    "ஜோதி - ஐ பார்த்தாலே கையெடுத்து கும்பிடுனும்போல இருக்கும்."

    ஆமாங்க உங்க ஜோதியைப் படித்தாலே கையெடுத்து கும்பிடுனும்போல இருக்கு.
    நானும் உங்க ஜோதியில ஐக்கியமாகிட்டேன்.
    நல்ல கதை... நல்ல சொல்லாட்சி... நல்ல விஷயம்.. தொடர்க

     
  • At 5:49 PM, Blogger NambikkaiRAMA said…

    நன்றி கணேஷ்! உங்களைப்போன்ற ஆர்வலர்களின் பின்னோட்டம் எனை மேலும் உற்சாகமூட்டுகிறது.

     
  • At 11:21 PM, Blogger வீ. எம் said…

    //அடுத்த ஜெயத்தில் சந்திப்போமா /


    "ஜெயம்" வந்து ரொம்ப நாளாச்சுபா... ஓல்டு, வேணும்னா அதே ஜெயம் ரவி நடிச்ச தாஸ்..இல்ல சதா நடிச்ச பிரியசகில சந்திக்கலாம்.. :)

    அதென்னமோ தெரியல, அரசர் , அரசர் னு வந்த இடத்துல எல்லாம் எனக்கு பாசிடிவ் ராமா னே படிக்க தோனுச்சு :)

    சரி சரி, இப்பொ சீரியஸ் கருத்து..

    அருமையாக போகிறது இந்த தொடர், இந்த காலத்துக்கு ஏற்றார்போல் எடுத்துக்காட்டுக்களுடன் மிக மிக நன்றாக எழுதுகிறீர்கள் ராமா, தொடருங்கள்..ஆவலாக அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன்..

    சரி, இப்போ உங்க வாக்குபடியே தனித்தன்மை டயலாக் ஒன்னு,

    அட! இந்த ராமா இருக்கானே, சூப்பர் டா , என்னமா எழுதறானு பாரேன் !!

    வீ எம்

     
  • At 12:20 PM, Blogger NambikkaiRAMA said…

    //அதென்னமோ தெரியல, அரசர் , அரசர் னு வந்த இடத்துல எல்லாம் எனக்கு பாசிடிவ் ராமா னே படிக்க தோனுச்சு :)//

    ..த்தோடா!!! :)

    //என்னமா எழுதறானு பாரேன் //

    தல உங்கள் மாதிரி வருமா!

     

Post a Comment

<< Home