PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, April 26, 2005

குளிர்ந்த தென்றலில்....

குளிர்ந்த தென்றலில் நான்
குளித்துக்கொண் டிருந்தபோது
மலர்ந்த மல்லியாய்
மங்கையவள் மான் விழியாள்!
தெளிந்த நீரோடையில்
துள்ளிவரும் வெள்ளி மீனாய்!
வெண்ணிலா முற்றத்தினில்
என் நிலா வந்து நின்றாள்!
வெட்கத்தில் வதனமோ

விண் நோக்கி மண் நோக்க!
வெள்ளிக் கொலுசுத்தண்டு
விரல்களால் கோலம் போட..
செவ்விதழ் இதழ்களோ
செய்தி சொல்லத் தத்தளிக்க..
பிறைநிலவு விரல்நகத்தை நல்

இதழ் கொண்டே வீழ்த்தினாள்!
மங்கையவள் கூந்தலோ
மலர்க் கூந்தல்!
மயக்கவைக்கும் சிற்பமாய் நல்மேனி!
சந்தனச்சிலை அழகாள் வந்தாள்- என்
சந்தோஷக் கடலினில் சரணம் புகுந்தாள்.
ஊர்வசி, ரம்பை ரதி மேனகையே!

ஓடிவாரும் என்னவளின் அழகைக்காண,
நீர் வசிக்கும் தேவலோகம் தூசியாகும்!
என்னவளின் பார்வைபட்டால் தூய்மையாகும்!
அத்தகை வஞ்சியவள் வல்லியவள்

அகிலமே வியந்திடும் பேரழகியவள்
சந்திரமதி என்று சொன்னால்- அந்த

இந்திரனின் தேவியும் ஒப்புக்கொள்வாள்.

Monday, April 25, 2005

இதுதாண்டா காதல்!

காதலாம் காதல்...?
யாரடா சொன்னது-அந்த

மூன்றெழுத்து மூதேவியை!
பஸ்சிலே நின்றுகொண்டு பார்க்கும்
பத்தாம் பசலி

காதல் எல்லாம் காதல் அல்ல!
கிஸ் என்று
கேட்டு அலையும்
கேடு கெட்ட
காதல் எல்லாம் காதல் அல்ல!
இலக்கியக் காதலெல்லாம்

இன்றைக்கு எடுபடாது!
'கண்டதும் காதல்'
என்பதெல்லாம் கட்டுக்கதை!
காதல்..

உள்ளத்தில் ஊறிவரும்
உணர்வுகள்தான் பேசும்!
காதல்..
கட்டாயம் வர வேண்டும்,
கல்யாணம் ஆன பின் வரவேண்டும்,
அதுவும்..
தான் கட்டிய மனைவியோடு
மட்டும்தான் வர வேண்டும்..
அதுதாண்டா காதல்!

Friday, April 22, 2005

"காதலிக்கும் நேரம்"


மெளனமே மொழியாய்
மனமே சம்மதமாய் ..
அவள் விழி இரண்டும்
என் நோக்கி - பின்
வெட்கத்தினில்
விண் மண் நோக்கி..
புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு
பூத்திருந்தால்..
என் எழில் பூங்கொடி!
இது
"காதலிக்கும் நேரம்" என்று!

Thursday, April 21, 2005

எதிரும் புதிரும்

கண்ணில்லாதவன் பெயர்
கண்ணாயிரமாம்!
உண்ணக் கஞ்சில்லாதவன் பெயர்
செல்வராசாம்!
தெருக்கோடி விதவையின் பெயர்
திலகவதியாம்!
தெய்வத்தைப் பழிக்கும்
நாத்திகன் பெயரோ நடராசாம்!
பொருத்தமில்லாதவற்றை
பொருத்திப் பார்ப்பதே
பொழுதுபோக்காகி விட்டது
என்று தணியும் -இந்த'
எதிரும் புதிரும்?

SEVEN STEPS LEAD U SUCCESS

Gita says "Whatever you think that will happen".

So friends we should aware of our Dream.

I tell you here the steps to success.

Step 1: Decide yourself what you exactly want?

Step 2: List out your Strenths and Weakness.

Step 3: Focus on your strength.

Step 4: Set your Desire as your Goal.

Step 5: Set Time period to achieve it.

Step 6: Activate your Sub-conscious mind about your Goal.

Step 7: Visualize it and put your action on it.

These 7 Steps drive you in to Success Heaven.

My wishes to the "Big Dreamers"