மனம் என்பது...
ஜெயமே ஜெயம் - 3
மனம் பற்றி அறியும் முன், நாம் உண்மையிலேயே மனம் திறந்து அதைப்பற்றி அறியத்தயாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மூன்று வகை மனம் பற்றி நாம் அறிவோம்.
1. தனிமனம்
2. ஆழ்மனம்
3. பிரபஞ்ச மனம்.
இதைப்பற்றி சுருக்கமா சொல்லுறதுங்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். பயிற்சி மூலமாகத்தான் இதை உணரமுடியுமே தவிர வெறும் படிப்பு மூலமா உணர முடியாதுதான் . இருந்தாலும் மேலோட்டமா இப்ப தெரிஞ்சுக்கிட்டா பின்னாளில் உபயோகப்படும். அதுசரி! எல்லோர்க்கும் பள்ளியில் இதைப் போன்ற அனுபவம் வெவ்வேறாய் இருந்திருக்கும்.
ஆசிரியர்: என்னடா நான் சொன்னது காதுல நுழைஞ்சிச்சா?
மாணவன்: சார்! வால் மட்டும் நுழையிலே சார்!
ஆசிரியர்: ???? :-(
தனிமனம் என்பது conscious mind/state.. நாம இப்போ நினைச்சிட்டு இருக்கிறது. உதாரணமா இந்த நிமிஷம் இதைப்படிச்சிட்டு இருக்கும் போதே நம்ம சிந்தனை வீட்டை நோக்கிப் போகும் ...
"ஆபீஸ் விட்டு வரும்போது டெய்லர் கடையில தைக்க கொடுத்த துணியை வாங்கிட்டு வந்திடுன்னு அம்மா சொன்னாங்களே... "
"போன வெள்ளிக்கிழமை மீனா என்னைப் பார்த்து சிரிச்சாளே :) எதுக்கு சிரிச்சா? அதுவா இருக்குமோ?"
"சேச்சே நம்ம PL -லோட பெரும் ரோதனையா போய்ச்சே , மனுசன் பிராணனை வாங்குறானே!"
இப்படியாக நமது சிந்தனை ஒரு ரவுண்ட அடித்தபடியே இருக்கும். அதே சமயம் உங்கள் வேலையையும் கவனித்து கொள்வீர்கள். இந்தக் கட்டுரையையும் படித்துக் கொள்வீர். இன்னும் அழகாகச் சொல்லப்போனால் உணர்வு நிலையில் உள்ள மனம் அல்லது விழிப்புநிலை எனலாம். நமது ஐம்புலங்களின் செயல்பாட்டுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
அதே சமயம் இவங்களுக்கெல்லாம் கெட் ஆபீஸ், நம்ம கேப்டன் மூளைதான். மனசு பற்றி பேசும் போது மூளை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்த ஐம்புலங்களின் உணர்வுகளின் தகவலைப்பெற்று அதற்கு ஏற்ற பதில் நடவடிக்கைக்களை எடுக்கவைப்பது மூளைதான். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலைச் செய்பவர். இந்த மூளையைப் பற்றி மற்றொரு சமயம் விரிவாகச் சொல்றேன்.
என்னங்க, டாபிக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது போல இருக்குதுல. . அதற்கும் நம்ம மனசுதான் காரணம்.
விஞ்ஞான முறைப்படி மூளைதான் மனசு என்பார்கள். மெய்ஞ்ஞானப்படி பார்த்தால் மனசு அதற்கும் மேல். ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, இப்படி நாம் பலவற்றை அறிவோம்.
மனசுங்கிறது தாவித் தாவி போறதுனால குரங்கு மனசுன்னு சொல்றது உண்டு "தத்தித்தாவுது மனமே...., அலைபாயுதேன்னு" நாம் பாட்டுப் பாடுறதும் உண்டு. இதுவரைக்கும் வாசித்த உங்களுக்கு இப்போ தனிமனம்னா என்னன்னு நிச்சம் புரிய ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்ததா நாம் பார்க்குறது ஆழ்மனம்! விஞ்ஞானரீதியா சொன்னா subconscious mind/ state . அது எப்படி இருக்கும்? அதன் தன்மை என்ன என்பதை நீங்கதான் சொல்லப் போறீங்க . ஒரு சின்ன உதாரணம்.
"நம்ம வீ.எம் இருக்காரே அலாரமே வைக்காம காலை-ல 5 மணிக்கெல்லாம் டான்னு எந்திருச்சிருவாருடா, எப்படித்தான் முடியுதோ..நமக்கெல்லாம் உச்சிவெயில் நெத்தியில் பட்டால்தான் முழிப்பே வருது"
"பேய் பிசாசு மேல எனக்கு நம்பிக்கை இல்லைதான் இருந்தாலும் , ராத்திரி 2.30 மணிக்கு இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு வரச்சே இருட்டுல ஏதாவது அசஞ்சா கூட குப்புன்னு வேர்க்குது மச்சி"
" அட மாப்ளே! நீயாவது பரவாயில்ல! அன்னைக்கு அந்த பஸ் ஆக்ஸிடன்ட்டை பார்த்ததில் இருந்து எனக்கு பஸ்ஸைகண்டாலே எமனைப் பார்ப்பது போல இருக்குதுப்பா"
மேற்சொன்னவை நமக்கு மிகப்பழக்கமான வசனங்கள்தான். இது எப்படி சாத்தியம்?
நமது தனிமனம் ஓய்வு எடுக்கக்கூடியது , அலசி ஆராயும் தன்மையுடையது.
"ராம் இது சரி! இது தவறு! நீ இப்படி போகாதே! இதையே செய்" என்றெல்லாம் நமக்குள் ஒலித்து/ஒளிந்து கொண்டு இருக்கும் மனசாட்சியின் வேலையை செய்வது இதுதான் எனலாம். மனசாட்சியும் இதுவும் ஒன்றெனவும் கொள்ளலாம்.
ஆனால் ஆழ்மனம் அப்படியில்லை. இதற்கு ஓய்வே கிடையாது. நாம் உறங்கிக் கொண்டு இருந்தாலும் ஆழ்மனம் விழித்துக்கொண்டு இருக்கும். இதற்கு நல்லது கெட்டது தெரியாது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இதில் பதிவுச் செய்யப்படுகிறது.
ஆழ்மனம் வித்தியாசமானது.. எதை விதைகிறோமோ அதை அப்படியே அறுவடை செய்யக் கூடியது. கர்மா விதி மாதிரி..இதில் நாம் நெல்லைப் போட்டா நெல்லு முளைக்கும்! புல்லை போட்டால் புல்லுதான் முளைக்கும்(அப்ப குவார்ட்டர் போட்டா என்னன்னு யாரும் இங்கே கேள்வி கேட்கப் பிடாதாங்கும்), நெருஞ்சி முள்ளைப்போட்டா முள்ளுதான் முளைக்கும்.
எதைக் கேட்டாலும் தரக்கூடிய இந்த ஆழ்மனதின் ஆழத்தை நாம் உணர்வது இல்லை. அதை உணர்ந்திட நாம் முயல்வதும் இல்லை.
தத்துவமசி, நீயே அது, உன்னையே நீ அறிவாய் போன்ற தத்துவங்கள் எல்லாம் இதற்குள் அடக்கம். "சரி ராமா! இதெல்லாம் இந்த ஜெயமே ஜெயத்தில எதுக்குன்னு கேட்கிறீங்களா?"
அடுத்த ஜெயத்தில் சொல்கிறேன்!

10 Comments:
At 5:01 PM, NambikkaiRAMA said…
test comment
At 6:48 PM, தாணு said…
அப்படியானால் தூக்கத்தில் வரும் சம்பந்தம் இல்லாத கனவுகள் எந்த மனதின் வெளிப்பாடு? தயவு செய்து விளக்குங்கள்
At 7:55 PM, NambikkaiRAMA said…
definitely i will explain about Dream in my next posting. Thanks for visiting my blog
At 11:23 PM, வீ. எம் said…
யோவ், அதை சொல்றதுக்கு முன்னாடி , பிரபஞ்ச மனம் பற்றி சொல்லனும் புரியுதா...
3 விதமான மனம் போட்டுட்டு.. 2 விளக்கி சொல்லிட்டு, 3 வத டீல்ல விட்டா என்ன அர்த்தம்..?? விறுவிறுப்பா படிச்சுகிட்டே வந்தா டமால்னு ஒரு சடன் பிரேக்..
சரியானவரா இருக்கீங்களே..
அது சரி, யாருப்பா அது நடுராத்திரி 5 மணிக்கெல்லாம் அலாரம் வெச்ச மாதிரி எழுந்துக்கற வீ எம்..??
8.00 மணிக்கு அலாரம் அடிச்சாலே( பெல் அடிக்கறது இல்ல, நச்சுனு அலாரத்தை வெச்சு நடு மண்டைல அடிச்சா) எழுந்துக்க யோசிக்கற வீ எம் தான் எனக்கு தெரியும் :)
என் மனசுல இதை படிக்கறப்போ என்ன தோனுச்சு தெரியுமா?
இப்படி நல்ல நல்ல விஷயம் எல்லாம் வலைப்பூவுல வந்துட்டு இருக்கு.. ஆனா
குமாரு, ரோசா ஆரம்பித்து வெச்ச அந்த தங்கரு மேட்டருல பிசியா இருக்காங்களே நம்ம முகமூடி, குழலி..
ஒன்னுத்துக்கும் ஒதவாத அந்த விஷயத்தை பிடிச்சிகிட்டு இப்படி பேசி பேசி தங்கள் திறமையை பாழாக்கி ... என்னத்த சொல்றது .. ஆரம்பிச்சவங்களே முடிச்சுக்கட்டும்.. சீக்கிரமா நம்ம முகமூடியும், குழலியும் அந்த தங்கரு மேட்டருல இருந்து விலகி, முன்ன மாதிரி மத்தவங்க பதிவுக்கு வந்து கலக்கல் கமெண்ட் எப்ப போட ஆரம்பிக்க போறாங்க??
அப்படினு தோனுது..
அதுக்கு என்ன மனசு காரணம் தல??
At 1:10 PM, NambikkaiRAMA said…
//யோவ், அதை சொல்றதுக்கு முன்னாடி , பிரபஞ்ச மனம் பற்றி சொல்லனும் புரியுதா...//
அவசரப்படாதீயும் வீ.எம்.:) அடுத்த வாரம் இதப்பற்றிதான் சொல்ல போறேன்.
//அப்படினு தோனுது..
அதுக்கு என்ன மனசு காரணம் தல??//
உங்களோட குழந்தைமனசு:)
At 9:18 PM, supersubra said…
கனவுகள் என்பது என்ன - என் பார்வையில்
http://yennottam.blogspot.com/
At 11:46 PM, வீ. எம் said…
1 Week over, adutha part engey?
At 9:50 PM, Dubukku said…
aha ungalukku utankutiyaa?
enakku ambasamudram.
kalakkala irukku unga pathuvu.
vaazhthukkal.
At 12:33 AM, வீ. எம் said…
பதிவு போட வரீங்களா?? இல்லையா சார்...
அப்புறம் என் காணாமல் போனவர்கள் லிஸ்ட்ல சேர்த்துடுவேன்..
படிச்சீங்களா, இல்லையா??? காணவில்லை காணவில்லை காணவில்லை பதிவு ,, அங்க கருத்து இல்ல..சோ, எனக்கு தெரியல..
இல்லைனா வந்து படியுங்க
At 12:44 AM, ஜென்ராம் said…
http://stationbench.blogspot.com/2005/05/blog-post.html
இது உங்கள் ஊர் பக்கம் தானே?
Post a Comment
<< Home