PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, September 13, 2005

பிரபஞ்ச மனம்

(எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் வழமைபோல் ஜெயமே ஜெயம் வெளியாக வில்லை. இருப்பினும் ஆர்வமுடன் மடல் இட்டு விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
ஜெயமே ஜெயம் - 4
Image hosted by Photobucket.com
சென்ற இதழில் தனிமனம் மற்றும் ஆழ்மனம் பற்றி பார்த்தோம். இன்னும் ஒன்று உள்ளதே பிரபஞ்சமனம்! அது என்ன? எப்படிப்பட்டது?

பிரபஞ்சம் - அண்டம் , இதற்கு எல்லையற்றது என்று கூட பொருள் கொள்ளலாம். நாம் முன்பே பார்த்ததுபோல் தனிமனதின் சிந்தனைகள் மற்றும் ஆழ்மனத்தின் சிந்தனைகள் இவற்றின் அனைத்துமாய் இருப்பதுதான் இந்த பிரபஞ்சமனம். இது எல்லையற்றது, மாபெரும் சக்தி, கடவுள் என்று நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் இதற்குச் சூட்டலாம்.

இதனை விளக்க சில உதாரணங்களோடு பார்ப்போம்.

"சுந்தர் இப்போதுதான் உன்னைப்பற்றி நினைச்சிட்டு இருந்தேன்..அதுக்குள்ள உன்கிட்ட இருந்து போன் வந்திடுச்சி"

"சிவா! உன்னைப் பார்த்து நாளாகுதேன்னு நினைச்சேன்..நினைச்சு ஒரு நிமிசம் கூட ஆகலை..அதுக்குள்ள நேரிலேயே வந்திட்டீயே! உனக்கு ஆயுசு 100 -ப்பா!"

இப்படிப்பட்ட சம்பவங்கள் நமக்கு நிகழாமல் இருக்க சாத்தியமே இல்லை.
அதேசமயம்....திடீரென ஏற்படும் தும்மல் , புரையேறுதல் போன்ற சம்பவங்களின் போது நம் தாத்தாவோ பாட்டியோ "யாரோ உன்னை நினைக்கிறாங்கப்பா" என்று சொல்லக் கேட்டிருப்போம். இதில் உள்ள நம்பகத் தன்மையை நான் இப்போது ஆராய விரும்பவில்லை எனினும்..

முந்தையப் பாராவில் குறிப்பிட்டது போன்றதான சம்பவங்களை நிச்சயம் மறுக்கமுடியாது. அப்படியானால், இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி நமக்கு எழுவது இயற்கையே! இது கிட்டத்தட்ட "டெலிபதி" போன்றதுதான்.

இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். .

உலகில் அனைத்து ஜீவராசிகளின் எண்ணங்களும் இந்த SPACE அல்லது அண்டவெளியில் பதிவு செய்யப்படுகிறது அல்லது பரவிக் கிடக்கிறது என்று கொள்வோம்.

நீங்கள் தற்போது நினைப்பது எனக்குத் தெரியாதுதான். அதே சமயம், நான் நினைத்துக் கொண்டு இருப்பதும் உங்களுக்குத் தெரியாது. தெரிய ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை சமீபத்தில் வந்த நடிகர் விவேக் ஜோக்கின் மூலம் சிரித்துணர்ந்திருப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் மிக உண்மை. அனைவரது எண்ணங்களும் இந்த பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றது. சேமித்து வைத்துள்ள பாடல் கேசட்களில் இருந்து வேண்டிய பாடலை வேண்டிய நேரத்தில் கேட்பதுபோல் நமது கடந்த/முற்கால/எதிர்கால சிந்தனைகளை இதில் இருந்து எடுத்துக்கொள்ளும் சக்தி நமக்கு இருக்குமாயின் நாம் மக்கள் மத்தியில் தெய்வம் போல் ஆகிவிடுவோம்.

ஆக, நான் பிரபஞ்சமனம் என்று சொல்ல வந்தது பிரபஞ்ச சக்தி என்றும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதானே மிக அவசியம். ஒரு எளிய உதாரணம் சொல்லி தொடர்கிறேன்.

நீங்கள் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமானால் அதற்கான (Frequency) அலைவரிசையில் வானொலிப்பெட்டியை tune செய்ய வேண்டும். இல்லை, சூரியன் FM -தான் கேட்க வேண்டும் என்றால் அதற்கான அலைவரிசைக்கு tune செய்ய வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளும் space ல் இருக்கின்றது. வேண்டிய நிகழ்ச்சியைப் பெற, வேண்டிய சானலுக்கு நாம் tune செய்கிறோம் :( உஹூம் இவ்வளவுதானா என்று கேட்கிறீர்களா?

நம் எண்ணங்களும் இதைப் போன்றதுதான். எண்ணற்ற சிந்தனைகள் இந்த பிரபஞ்சத்தில் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் நேர்மறையான சிந்தனைகளும் (Positive Thoughts), எதிர்மறையான சிந்தனைகளும் (Negative Thoughts) பொதிந்து கிடக்கின்றன. நாம் எப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளோம். எப்படிப்பட்ட எண்ணத்தை இந்த பிரபஞ்சத்தில் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

சில ஆன்மீகப் பெரியவர்களைச் சந்தித்திருப்பீர்கள். அவர்கள் முன்னே சென்றதும், அவர்களால் நம்மைப் பற்றி எப்படி முழுமையாக சொல்லமுடிகிறது? நம் மனதில் நினைப்பவற்றை எப்படி கணிக்க முடிகிறது? நம் எதிர்காலம் குறித்து துல்லியமாக அவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது?

அவர்கள், தங்கள் எண்ண அலைகளை நமது எண்ண அலைகளுக்கு இணையாக tune செய்கிறார்கள். நம்மைப் பற்றி துல்லியமாகக் கணித்து விடுகிறார்கள்.

இது என்ன பிரமாதம் " ராமா! என் முன்னே வந்து நில்லு உன் மூஞ்சப்பார்த்தே உன்னைப்பற்றி சொல்லிருவேன்னு " சொல்றீங்களா!

சார் ஒரு நிமிசம்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மைதான். நான் இங்கே ஜோதிடம் பற்றி விவரிக்க வரவில்லை..

உங்களைப் பொன்ற ஆர்வம் மிக்கவர்களுக்கு நான் சொல்ல வந்தது கண்டிப்பாக புரிஞ்சிருக்கும் என்பது எனது நம்பிக்கை.
Image hosted by Photobucket.com
அன்பர்களே! பிரபஞ்சமனம் பற்றி நாம் இப்போ சிந்திக்க ஆரம்பிச்சிருப்போம். இதன் சக்தியை பயன்படுத்துவது எப்படி? இதற்கும் நம்மின் வெற்றிக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பற்றிய மிக முக்கிய விளக்கங்களை அடுத்த பதிவில் சொல்ல இருக்கின்றேன்...


ஜெயம் வளரும்...

5 Comments:

  • At 5:34 PM, Blogger தாணு said…

    de javu phenomenaன்னு ஒண்ணு இருக்கே, இதுவும் பிரபஞ்ச மனசு சம்பந்தப்பட்டதோ?

     
  • At 5:37 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    // " ராமா! என் முன்னே வந்து நில்லு உன் மூஞ்சப்பார்த்தே உன்னைப்பற்றி
    சொல்லிருவேன்னு " சொல்றீங்களா! //

    ஆமாங்க.... பிரபஞ்ச மனம் பற்றி நல்ல சொல்லியிருக்கீங்க. ஒரே ஒரு கேள்வி.

    நான் எனக்கு பக்கத்திலே இருக்கும் நண்பனை நினைத்தால் அவனுக்கு தும்மல் வர மாட்டேன் என்கிறது ஆனா பாருங்க சாப்பிடும் பொழுது மட்டும் எனக்கு தும்மல் அடிக்கடி வருகிறது.
    இதனால் டெலிபதி என்பதை என்னால் முழுமையாக ஏற்கவும் முடியவில்லை விலக்கவும் முடியவில்லை

     
  • At 6:27 PM, Blogger NambikkaiRAMA said…

    //நான் எனக்கு பக்கத்திலே இருக்கும் நண்பனை நினைத்தால் அவனுக்கு தும்மல் வர மாட்டேன் என்கிறது ஆனா பாருங்க சாப்பிடும் பொழுது மட்டும் எனக்கு தும்மல் அடிக்கடி வருகிறது.//

    சாப்பிடும் பொழுது எனக்கெல்லாம் விக்கல்தான் வருகிறது :))

     
  • At 6:33 PM, Blogger NambikkaiRAMA said…

    தாணு! அவர்களே! என் வலைப்பூபக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி. dejavu என்பது (கனவில் காண்பவை நேரில் நடப்பது) சந்தேகமே இல்லாமல் இந்த ஆழ்மன் சக்திதான்.

     
  • At 11:54 PM, Blogger வீ. எம் said…

    கடந்த 2 நாட்களாக வேலை சற்று அதிகமாக இருந்ததால் கொஞ்சம் தாமதமாக படிக்கவேண்டியதாகிவிட்டது ராமா..

    சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால்

    அட , அடுத்த பதிவுக்கு ஒரு மேட்டர் ரெடி.. ஊர்ல எல்லாம் சவுக்கியமா?? எப்போ ப்ரோமஷன்?? புரியுதா?

    பிரபஞ்ச மனம் பற்றி தெளிவாக புரியும்படி சொன்னதற்கு நன்றி ராமா..

    ஏற்கனவே லேட், சோ சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.. இல்லனா உங்களை என்னோட காணவில்லை காண....... புரியுதா?

     

Post a Comment

<< Home