PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, June 22, 2005

மண்டையோட்டால் வந்த கவிதை?

Image hosted by Photobucket.com

ஏய் மனிதா!
உற்று நோக்கு உற்று நோக்கு!
உனக்குள் உன்னை உற்று நோக்கு!
உள்ளிருப்பது வெறும் எலும்பும் சதையும்தான்!
முகத்தோடு உன் அகத்தையும்
வண்ணப் பூச்சால் மறைத்து விட்டாய்!
உற்று நோக்கு உற்று நோக்கு!
எலும்பும் சதையும் தாண்டி உற்று நோக்கு!
உன்னை உணர்வாய்! உண்மை உணர்வாய்-பின்
எதற்கு இந்த பொய் வேடம்?
எதற்கு இந்த பித்தலாட்டம்?
இயன்ற வரையில் பிறர்க்கு உதவி,
இயலாது போயின் மடிந்து போ!
உன் கல்லறைக்கு வரும் கூட்டம்
நீ கசடற்றவனா என்பதை கற்பிக்கும்!

4 Comments:

  • At 6:24 PM, Blogger வீ. எம் said…

    நல்ல கவிதை ராம்,
    ////இயன்ற வரையில் பிறர்க்கு உதவி,
    இயலாது போயின் மடிந்து போ!///
    பாவம்பா , இது கொஞ்சம் அதிகம்.. :) இங்கே உதவி கேட்கும் நிலையில் உள்ளவர் தான் அதிகம்..

    வீ எம்

     
  • At 6:31 PM, Blogger NambikkaiRAMA said…

    மண்டையோட்டுக்குள்ள பெண் உருவம் தெரியுது பார்த்தீங்களா அதான் கொஞ்சம் ஓவரா எழுதிட்டேன்.(ஹி..ஹி)
    "உபகாரம் செய்ய முடியாவிட்டாலும் விட்டாலும் ஓத்திரம் செய்யாமலாவது இருன்னு" சொல்வாங்களே அந்த பிரின்சிபல் பயன்படுத்தலாமா?
    வீ.எம் அவர்களே!தங்கள் கருத்துக்கு நன்றி!

     
  • At 7:25 PM, Blogger tamil said…

    "இயன்ற வரையில் பிறர்க்கு உதவி,
    இயலாது போயின் மடிந்து போ!"

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்
    மண்டையோட்டுக்குள்ளும் பெண் உருவமா..? ஹா..ஹா..

     
  • At 7:49 PM, Blogger NambikkaiRAMA said…

    வாழ்த்துக்கு நன்றி சண்முகி!
    -பாசிடிவ்ராமா

     

Post a Comment

<< Home