PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Monday, June 13, 2005

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

Image hosted by Photobucket.com
அதிகாலை கண்விழித்து
அவசரமாய் ஓடி..
கடைவீதிச் சென்று
ரேசனையும் மிஞ்சும்
கியூவில் நின்று,
ஏழுரூபாய் நீட்டி
இந்த வார
"Best..கண்ணா..Best..!
வாங்கிப் படித்தேன்!
அவர்கள்..
இலவசமாய்த் தந்த
"ஆசிர்வாத் ஆட்டா"
அரைக்கிலோ மாவு
நன்றாய் இருந்தது.

17 Comments:

  • At 3:07 PM, Anonymous Anonymous said…

    என்ன ராம்
    பெஸ்ட் கண்ணா பெஸ்ட் வாங்க க்யூவில் நிக்க வேண்டுமா, ஆச்சிரியமாக இருக்கிறதே?. ஓ, ஒசியிலே மாவு கொடுக்கறாங்க இல்லே அதனாலதான்.

    நல்லக் கவிதை.
    தொடரட்டும்.

     
  • At 3:16 PM, Anonymous Anonymous said…

    My request is check the manufacturing dt of aata..

     
  • At 3:18 PM, Blogger வீ. எம் said…

    நான் ஆட்டா வாங்கியவுடன் , best kanna best ஐ அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்.. :)
    வீ எம்

     
  • At 3:20 PM, Blogger NambikkaiRAMA said…

    okay vijay i will do that. மக்களின் இன்றைய இலவச மோகத்தைக் காட்டத்தான் அப்படியெழுதினேன்.

     
  • At 3:23 PM, Blogger NambikkaiRAMA said…

    வீ.எம். நீங்கள் அங்கேயே விட்டு விட்டீர்கள்.. நான் அந்த புத்தகத்தை(மாவை) வீட்டிற்கு கொண்டுவந்து பூரி செய்து அடுக்கி வைக்க பயன்படுத்திக் கொண்டேன். சிறு துரும்பும் பல் குத்த உதவும் பாருங்கள்.ஹி..ஹி..ஹி

     
  • At 4:11 PM, Anonymous Anonymous said…

    இன்றுதான் முதன்முதலாக பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது உங்கள் வலைப்பூ. தொடருங்கள். வாழ்த்துக்கள்!

     
  • At 4:32 PM, Anonymous Anonymous said…

    என்ன ராம்

    அனானிமஸ்க்கு பதிலே இல்லெ

    ச்சும்மா.....

    உம்ம நண்பன் தாம்லெ

     
  • At 5:31 PM, Blogger NambikkaiRAMA said…

    ஏம்ல அந்த அனானிமஸ் நிலா தானே!

     
  • At 5:34 PM, Blogger NambikkaiRAMA said…

    முத்தமிழ் அவர்களுக்கு மிக்க நன்றி! உங்கள் முத்தமிழ் மன்றம் எனக்கு நல்ல நண்பர்கள் பலரைத் தந்துள்ளது. ஏகப்பட்ட தலைப்புகளில் என் மனதை கவர்ந்தது உங்கள் மன்றம்தான். உங்கள் சுட்டியை இங்கே இணைக்கவுள்ளேன்.

     
  • At 3:27 AM, Blogger Suresh Kumar said…

    this was good..
    but just change the font color..
    the wordings doesnt match with the background..
    but apart from the poems and photos are really good...

     
  • At 6:15 PM, Blogger NambikkaiRAMA said…

    விஜய் நீங்கள் கேட்டபடி உற்பத்தியான நாளைப்பார்த்தேன் .அது தற்போது தயார் செய்யப்பட்டதுதான்(june 2005). என்றுதான் கவரில் இருந்தது. not for sale என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

     
  • At 10:14 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said…

    கவிதை அருமை :-)

    அடுத்த வாரம் பூரிக்கு தொட்டுக்க ஏதாச்சும் இலவசமாத் தருவாங்களோ... :-P

     
  • At 10:15 PM, Anonymous Anonymous said…

    கவிதை அருமை :-)

    அடுத்த வாரம் பூரிக்கு தொட்டுக்க ஏதாச்சும் இலவசமாத் தருவாங்களோ... :-P

     
  • At 12:58 PM, Blogger NambikkaiRAMA said…

    தந்தாலும் தருவாங்க கோபி! எந்த கம்பெனி தலையில மிளகா அரைக்கப்போறாங்களோ!

     
  • At 2:25 PM, Anonymous Anonymous said…

    entha company thalaila milagaa araichaa unaku enna... unakku osila kidaikuthu illa

     
  • At 6:27 PM, Blogger NambikkaiRAMA said…

    //entha company thalaila milagaa araichaa unaku enna... unakku osila kidaikuthu illa //
    அதுவும் சரிதான் அனானிமஸ்

     
  • At 8:09 PM, Blogger U.P.Tharsan said…

    :-))

     

Post a Comment

<< Home