PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, May 28, 2005

வெற்றி நமதே!


*
முடியும் முடியும்
என்று சொன்னால்
உன்னால் முடியும் பாரடா!
*
விடியும் என்று
நம்பி இருந்தால்
நிச்சயம் விடியும் கேளடா!
*
உண்மை உழைப்பு
ஊக்கம் உயர்வை
உணர்ந்து நீயும் பாரடா!
*
காட்சி இனிக்கும்
கவலை பறக்கும்- கைக்
கொள்வாய் இதைக் கேளடா!
*
மரமாய் விலங்காய்
மண்ணில் மட்கிடவா
மானிடா நீயும் அவதரித்தாய்?
*
ஆறறிவு உடைய
மனிதா இதை
உணர்ந்தால் உனக்கே வெற்றியன்றோ!
*
அதிர்ஷ்டம் நம்பி
தினமும் வெம்பி
கரையேர நீ காத்திருந்தால்..
*
காலம் உன்னைக்
கொன்று விடும் – இது
ஞாலம் கண்ட உண்மையன்றோ!
*
வீணில் வெட்கி
தலை குனிந்திடவா- இவ்
விந்தையுலகில் நீ பிறந்தாய்?
*
மானிடம் தழைக்க
வந்தவன் நீ
மாபெரும் சாதனை ஆற்றிடவா!
*
இன்பம் துன்பம்
இரண்டையும் ரசிக்கும்
இதயத்தை நீ பெற்றிடுவாய்?
*
கோபம் என்னும்
கொடிய விஷத்தை
முழுமையாகக் கொன்றிடுவாய்?
*
வானம் போற்றும்
தலைவனாய் ஆக
வாலிபம் முதலே முயன்றிடுவாய்!
*
பேரும் புகழும்
உனக்கே சொந்தம்
பேரறிவாளனே வந்திடுவாய்!
*
சுதந்திர மூச்சை
சுவாசிப் பவனே
சுந்தரமானவன் நீ அன்றோ!
*
இம் மாபெரும் மண்ணில்
மகாத்மா ஆகி - வாழ்வதே
நமக்குப் பெருமையன்றோ!
*
ஆதலின் சீரிய
சிந்தனை கொண்டு - செயல்
ஆற்றிட நீ வா நண்பா!
*
வெற்றி! வெற்றி!
வெற்றி! என்றே
வெற்றி முழக்கம் செய்திடுவாய்!
*
நம்பி கை வை
நம்பிக்கை வை!
நிச்சயம் நமக்கே வெற்றியன்றோ!

*

4 Comments:

  • At 3:26 PM, Anonymous Anonymous said…

    ராம், இந்த கவிதையைப் படித்தவுடன் வந்த ஞாபகம்:

    மனதில் உறுதி வேண்டும்,
    வாக்கினிலே இனிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்;
    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும்,
    தரணியிலே பெருமை வேண்டும்;
    (மனதில் உறுதி வேண்டும்)

    கண் திறந்திட வேண்டும்,
    காரியத்தில் உறுதி வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும்,
    பெரிய கடவுள் காக்க வேண்டும்;
    மண் பயனுற வேண்டும்,
    வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.
    (மனதில் உறுதி வேண்டும்)
    -பாரதி

     
  • At 5:27 PM, Blogger NambikkaiRAMA said…

    ஆம் அன்பரே! பாரதியின் இந்தப் பாடல் உடைந்துபோய் இருப்பவனை எழச்செய்யும் அற்புத பாடல். தங்கள் பெயரைக்கூட இடாமல் சென்று விட்டீர்.

     
  • At 6:18 PM, Blogger மஞ்சூர் ராசா said…

    ராம்
    அந்த அனானிமஸ் நான் தாம்லெ
    ச்சும்மா சீண்டிப் பாத்தோம்லெ
    கவிதெயிலெ கலக்கறீரு, நடக்கட்டும்லெ.

    (ஆமா வெள்ளெ மயில் இருக்கா? நான் பாத்ததில்லையே)

     
  • At 6:38 PM, Blogger NambikkaiRAMA said…

    நானும் பார்த்ததில்லை! ஆனா! வெள்ளை புலி மாதிரி இதுவும் அபூர்வமானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.இது எனக்கு மெயிலில் வந்த படம்.

     

Post a Comment

<< Home