குளிர்ந்த தென்றலில்....
குளிர்ந்த தென்றலில் நான்
குளித்துக்கொண் டிருந்தபோது
மலர்ந்த மல்லியாய்
மங்கையவள் மான் விழியாள்!
தெளிந்த நீரோடையில்
துள்ளிவரும் வெள்ளி மீனாய்!
வெண்ணிலா முற்றத்தினில்
என் நிலா வந்து நின்றாள்!
வெட்கத்தில் வதனமோ
விண் நோக்கி மண் நோக்க!
வெள்ளிக் கொலுசுத்தண்டு
விரல்களால் கோலம் போட..
செவ்விதழ் இதழ்களோ
செய்தி சொல்லத் தத்தளிக்க..
பிறைநிலவு விரல்நகத்தை நல்
இதழ் கொண்டே வீழ்த்தினாள்!
மங்கையவள் கூந்தலோ மலர்க் கூந்தல்!
மயக்கவைக்கும் சிற்பமாய் நல்மேனி!
சந்தனச்சிலை அழகாள் வந்தாள்- என்
சந்தோஷக் கடலினில் சரணம் புகுந்தாள்.
ஊர்வசி, ரம்பை ரதி மேனகையே!
ஓடிவாரும் என்னவளின் அழகைக்காண,
நீர் வசிக்கும் தேவலோகம் தூசியாகும்!
என்னவளின் பார்வைபட்டால் தூய்மையாகும்!
அத்தகை வஞ்சியவள் வல்லியவள்
அகிலமே வியந்திடும் பேரழகியவள்
சந்திரமதி என்று சொன்னால்- அந்த
இந்திரனின் தேவியும் ஒப்புக்கொள்வாள்.
குளித்துக்கொண் டிருந்தபோது
மலர்ந்த மல்லியாய்
மங்கையவள் மான் விழியாள்!
தெளிந்த நீரோடையில்
துள்ளிவரும் வெள்ளி மீனாய்!
வெண்ணிலா முற்றத்தினில்
என் நிலா வந்து நின்றாள்!
வெட்கத்தில் வதனமோ
விண் நோக்கி மண் நோக்க!
வெள்ளிக் கொலுசுத்தண்டு
விரல்களால் கோலம் போட..
செவ்விதழ் இதழ்களோ
செய்தி சொல்லத் தத்தளிக்க..
பிறைநிலவு விரல்நகத்தை நல்
இதழ் கொண்டே வீழ்த்தினாள்!
மங்கையவள் கூந்தலோ மலர்க் கூந்தல்!
மயக்கவைக்கும் சிற்பமாய் நல்மேனி!
சந்தனச்சிலை அழகாள் வந்தாள்- என்
சந்தோஷக் கடலினில் சரணம் புகுந்தாள்.
ஊர்வசி, ரம்பை ரதி மேனகையே!
ஓடிவாரும் என்னவளின் அழகைக்காண,
நீர் வசிக்கும் தேவலோகம் தூசியாகும்!
என்னவளின் பார்வைபட்டால் தூய்மையாகும்!
அத்தகை வஞ்சியவள் வல்லியவள்
அகிலமே வியந்திடும் பேரழகியவள்
சந்திரமதி என்று சொன்னால்- அந்த
இந்திரனின் தேவியும் ஒப்புக்கொள்வாள்.
2 Comments:
At 4:40 PM, மஞ்சூர் ராசா said…
உங்க மனைவியின் பெயர் சந்திரமதியா?
(குசும்பு!)
At 12:45 PM, NambikkaiRAMA said…
ஐயா! ராசா! குடும்பத்திலே குழப்பத்தை உண்டுபண்ணிருவீருபோல இருக்குதே.
Post a Comment
<< Home