PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, February 14, 2006

காதலர் தினமாம்???

#
இறக்குமதி செய்யப்பட்ட
சரக்குகளில் இதுவும் ஒன்று
இளைஞர்களைக் கெடுக்க வந்த
சிகப்புச் சுனாமி!
#
மாணவ சமுதாயம்
இதில் மட்கிப் போவதை
நம்மால் மறுக்க முடியுமா?
#
மெரினா பக்கம் சென்றால் தெரியும்
மறைக்கப்பட வேண்டிய அத்தனையும்
அப்பட்டமாய் திறந்த வெளியில்..
16 ம் - 18 ம் கட்டியணைத்தப்படி
கடற்கரை, பூங்கா இன்னும் பல இடங்களில்
காரணம் காதலர் தினமாம்.
#
ஒட்டிக் கொள்வதும்
உரசிக் கொள்வதுமாய்
விரசங்கள் அத்தனையும்
வீதியில் அரங்கேற்றம்!
#
எல்லா அரங்குகளிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜோடிகளுக்கு மட்டும் அனுமதி
தள்ளுபடி விற்பனை
சொல்லி மாளாது..
#
பத்திரிக்கை , தொலைக்காட்சியில்
அப்பப்பா சொல்லவே வேண்டாம்..
வியாபார தந்திரிகளின் யுக்தி
வெற்றி பெற்றி ருக்கிறது.
#
பள்ளி சென்று வரும் பெண்
கல்வி கற்று வருவாளோ -இல்லை
கலவி கற்று வருவாளோ என்று
கையில் உயிரை பிடித்தபடி தாய்.
#
சேயாய் இருக்கையில்
செய்த விளையாட் டெல்லாம்
தாயாய் ஆகையில்தான்
தவறென்று புரிகிறது.
#
நெஞ்சில் கை வைத்து
சொல்லுங்கள் பார்ப்போம்!
நம் வீட்டில் - இந்
நிகழ்வை அனுமதிப்போமா?
#
உண்மைக் காதலே
உன் பெயரை கையகப்படுத்தி
வியாபாரமும் விரசங்களும்
அரங் கேறுவதால் - எனக்குள்
எழுந்த கோபம்தான் இது.
#
பழுது பார்க்கவேண்டிய விசயங்கள்
பல இங்கே இருக்கையில்
வீணே பொழுதைப்
போக்குதல் சரியோ?
#
இளைஞர் தினத்திற்கு
இத்தனை வரவேற்பு இல்லை
காதலர் தினம் என்றால்
வரிந்து கட்டுகிறார்கள்.
#
ஓ! விவேகானந்தா
மீண்டும் நீ பிறந்துவா
காமத்தில் மோகத்தில்
கிடக்கும் எங்களுக்கு -ஞானத்தை
வீரத்தை புகட்ட வா.
#
வரும் போது கைகளை
இறுக மூடிக்கொள் - இல்லையேல்
உனக்கும் கையில் சிகப்புரோஜா
கொடுத்திடுவர் ஜாக்கிரதை!

முக்கியக் குறிப்பு: உண்மை காதலுக்கு எந்நாளும் எம் வாழ்த்து உண்டு!

5 Comments:

  • At 2:55 PM, Blogger Unknown said…

    //இளைஞர் தினத்திற்கு
    இத்தனை வரவேற்பு இல்லை
    காதலர் தினம் என்றால்
    வரிந்து கட்டுகிறார்கள்.//

    Valid point

     
  • At 2:58 PM, Blogger NambikkaiRAMA said…

    நன்றி தேவ்

     
  • At 4:08 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said…

    //நெஞ்சில் கை வைத்து
    சொல்லுங்கள் பார்ப்போம்!
    நம் வீட்டில் - இந்
    நிகழ்வை அனுமதிப்போமா?//

    உண்மை..

    வளர்ப்பு முறையும் சேர்க்கையும் நன்றாய் இருந்தால் இது போன்ற நிகழ்வை நாம் அனுமதிக்க வேண்டிய அவசியமே இருக்காது (அதாவது இந்நிகழ்வே நம் வீட்டில் நிகழாது)

     
  • At 7:19 PM, Blogger Raghavan alias Saravanan M said…

    \\இளைஞர்களைக் கெடுக்க வந்த
    சிகப்புச் சுனாமி!\\

    நெத்தியடி!! சுத்தியடி!!

    \\விரசங்கள் அத்தனையும்
    வீதியில் அரங்கேற்றம்!\\

    நிதர்சனமான உண்மை நிகழ்கால வாழ்வில் நிச்சயமாய் நடக்கிறது!

    \\கல்வி கற்று வருவாளோ -இல்லை
    கலவி கற்று வருவாளோ என்று
    கையில் உயிரை பிடித்தபடி தாய்.\\

    அப்பட்டமான உண்மை!

    \\சேயாய் இருக்கையில்
    செய்த விளையாட் டெல்லாம்
    தாயாய் ஆகையில்தான்
    தவறென்று புரிகிறது.\\

    உள்ளூர உணர்ந்து பார்த்தால் உரைக்கும் வரிகள்.... நம் வீடுகளிலேயே சொல்வார்களே... "நீயும் ஒரு பிள்ளையைப் பெற்றுப் பார்" என்று. அதை அழகாக நினைவுபடுத்துகின்றன இந்த வரிகள்...


    \\ இல்லையேல்
    உனக்கும் கையில் சிகப்புரோஜா
    கொடுத்திடுவர் ஜாக்கிரதை!\\

    வரவேற்கத் தகுந்த வரிகள்... ஏனெனில் வருங்கால இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டு தங்கள் நிகழ்காலத்தைத் தொலைத்த கடந்த கால (காலம் சென்ற) தலைவர்களுக்குத்
    தற்போதைய நிலவரம் சத்தியமாய்த் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    முக்கியக்குறிப்பு! முத்தாய்ப்பு!!!

    வாழ்த்த வயதில்லை அதனால் ஆதரவுகளை அள்ளித்தருகிறேன் ஏற்பீர்களா?!!

     
  • At 7:22 PM, Blogger NambikkaiRAMA said…

    //வாழ்த்த வயதில்லை அதனால் ஆதரவுகளை அள்ளித்தருகிறேன் ஏற்பீர்களா?!! //

    ரொம்ப நன்றிங்க! உங்கள் வாழ்த்துக்கு:)
    வலைப்பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி இராகவன்.

     

Post a Comment

<< Home