PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, January 11, 2006

நாலரைக்கே எழுந்து விடு!

0
நாலரைக்கே எழுந்து விடு
நல்லதையே நினைத்து விடு
ஐந்தரைக்குள் காலைக் கடன்
அத்துணையும் முடித்து விடு!
0

இம்மண்ணுலகை நீ காண
வரம் தந்த இறையோனை
மனந்தன்னில் தினம் கொண்டு
ஆறு(ம்) வரை தியானம் செய்!
0
விந்துவாய் இருந்த போதே
வீறுகொண்டு வெற்றி பெற்றாய்!
வேதனையை தூக்கி எறி
வெற்றியே உந்தன் நெறி!
0
சூரிய விடியல் காண்
சுகந்தநல் காற்றை சுவாசி
கூரிய மதியைக் கொள்
குறைவில்லா நூல்கள் படி!
0
ஆரிய திராவிடன் என்ற
அடிதடிகள் உனக்கு வேண்டா
சீரிய சிந்தனை கொள்
யாவரும் கேளீர் தானே!
0
ஏழுமணி ஆன பின்னும்
எழவில்லை நீ என்றால்
இழவுக்கும் உனக்கும் இங்கே
வித்தியாசம் எதுவு மில்லை!
0
எட்டுமணி நேரம் மட்டும்
உழைத்துவிட்டு மற்ற நேரம்
கள்ளுக்கும் கரும்புகைக்கும்
கட்டிலுக்கும் காசை யெல்லாம்,
0
கொட்டம் கொட்டி
தீர்த்து விட்டால் - ரத்தக்
கண்ணீர் வடிக்க நேரும்
எம்.ஆர்.ராதா படத்தைப் பார்!
0
உண்ணும் உணவும்
பண்ணும் பணமும்
சேமிக்க வேண்டும்
இல்லையேல் அதோ கதியே!
0
சிற்பம் வடித்திட
சிறந்தக்கல் வேண்டு மன்றோ
எட்டு ஒன்று எட்டென்று
மூவேளை முறையாய் உண்!
0
ஊதியத்திற்கு மேற்பட்ட
உழைப்பேதான் வெற்றி தரும்
அனுபவம் உனைச் சேரும்
ஆனந்த வாழ்வும் வரும்!
0
ஆதலினால் நானும் சொல்வேன்
நண்பனே நீயும் கேள்!
பேரிடர் வந்திடினும் -பின்
வாங்காதே தொடர்ந்து செல்!
0
இலட்சியம் நீயும் கொண்டால்
இலட்சங்கள் தானே வரும்!
அச்சம் தவிர் அன்பா
அகிலத்தை வெல்வாய் அன்பா!
0
விழுப்புண் இல்லா தவன்
வீரனாய் இருந்த தில்லை
காய்ந்திடா கரங்கள் இங்கு
உழைப்பினைச் சொன்ன தில்லை.
0
ஏ.சி யில் அமர்ந்த படி
கணினி பணி செய்பவனின்
மணிக்கட்டை உற்றுப்பார்
அவனுக்கும் காய்ப்பு உண்டு!
0
வடுக்கல் வழுக்கல் அன்று
வழுக்கலும் தீது அன்று
போதிய பாடம் கல்
போராடு ஜெயம் பெறுவாய்!
0
யானையையே சாய்த்து விடும்
எறும்பின் திறன் அறியாயோ- கிழட்டுப்
பூனையாய் இருக்காதே
கிளர்ந்தெழு! புலியாய் பாய்!
0
பதினோரு மணிக்கு எல்லாம்
படுக்கைக்குச் சென்று விடு
அன்றைய தினத்தை - சற்றே
சிந்தையில் அசை போடு!
0
நல்லவை செய்திருப்பாய்
அல்லவையும் செய்திருப்பாய்
அடடா! அடடே! என்றெல்லாம்
ஆலோசனைகள் பல தோன்றும்!
0
பன்னிரண்டு மணிக்கு மேலும்
படுக்கையில் விழிப்பு என்றால்
பலான எண்ணம் தோன்றும்
பல(ம்)ன் அனைத்தும் அற்றுப் போகும்!
0
ஆதலின் அன்பனே கேள்!
அலைபாயா மனதைக் கொள்
ஆண்டவன் திருநாமந்தனை
மனதிலே ஜெபித்த படி
படுத்தவுடன் தூங்கிப்போ
அதிகாலை மீண்டு(ம்) எழ!

6 Comments:

  • At 12:29 PM, Blogger NambikkaiRAMA said…

    test comment

     
  • At 12:52 PM, Blogger கைப்புள்ள said…

    மிகச் சிறப்பாக இருந்தது. நல்ல கற்பனை.
    ரசித்த வரிகள் -
    கொட்டம் கொட்டி
    தீர்த்து விட்டால் - ரத்தக்
    கண்ணீர் வடிக்க நேரும்
    எம்.ஆர்.ராதா படத்தைப் பார்!

    ஏ.சி யில் அமர்ந்த படி
    கணினி பணி செய்பவனின்
    மணிக்கட்டை உற்றுப்பார்
    அவனுக்கும் காய்ப்பு உண்டு

    இன்றைய நாளை Positive ஆக்கியது தங்கள் கவிதை.

     
  • At 1:10 PM, Blogger நளாயினி said…

    ஆகா.! இன்றய நாள் இனிய நாள்.

     
  • At 1:18 PM, Blogger NambikkaiRAMA said…

    கைப்புள்ளைக்கு நன்றி!
    உங்கள் வலைப்பூவை பார்க்க முடியவில்லையே. சுட்டியை இங்கு தாருங்களேன்

     
  • At 2:14 PM, Blogger Unknown said…

    Postive Thoughts... Just super...

    It has to reach a wider audience...

     
  • At 5:30 PM, Blogger கைப்புள்ள said…

    நன்றி இராமா சார்,
    கைப்புள்ளயை http://kaipullai.blogspot.com என்ற தளத்தில் காணலாம்

     

Post a Comment

<< Home