PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, August 17, 2005

ஜெயமே ஜெயம் - 1 சுயமுன்னேற்றத் தொடர்

எந்தைக்கும், என் தாய்க்கும், என் சிந்தையை சீரமைக்கும் ஸ்ரீவை குருநாதர் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகளுக்கும் வந்தனை சொல்லி , எல்லாம் வல்ல ஸ்ரீராமதூதன் பாதம் பணிந்து "ஜெயமே ஜெயம்" என்ற இந்த உற்சாகத் தொடரை துவங்குகின்றேன். இந்த தொடர் நம்பிக்கை கூகுள் குழுமத்திலும் இடம் பெறும்.


நம்பிக்கை நண்பர்களுக்கும், வலைப்பூ நண்பர்களுக்கும் எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்! அன்பின் நண்பர்களே! யான் சிந்தித்த சந்தித்த கருத்துக்களை கற்ற பெற்ற விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகின்றேன். உங்கள் ஆலோசனைகள் என்றென்றும் ஏற்றுக் கொள்ளப் படும். உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் உங்கள் நேரம் இங்கே வீணாகிவிடாது என்ற உறுதியோடு இத்தொடரை ஆரம்பிக்கின்றேன்.

ஜெயமே ஜெயம்- 1

நாம் இந்த மண்ணில் மனிதனாய் பிறந்திருக்கின்றோம். அடுத்தப்பிறவி உண்டா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.. அடுத்தப் பிறவியின் அனுபவங்களையோ, முற்பிறவியின் அனுபவங்களையோ நம்மால் இப்போது உணர முடியாது. அப்படியானால் இந்த நிமிடம் இந்த உலகம் இந்த பிறப்பு மட்டுமே நமக்கு இப்போதைக்குச் சொந்தம்.

ஆக, இந்த இனிய பிறப்பு வளமுடன், செல்வச்செழிப்புடன் மகிழ்வுடன் இருக்க வேண்டாமா? வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டாமா? செல்லும் இடம் எல்லாம் சிறப்பு வேண்டாமா? நமைக் கண்டோர் எல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டாமா? எங்கும் எதிலும் ஜெயமே என்ற செல்வாக்கு நமக்கு வேண்டாமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் வேண்டும் என்று சொல்பவர்களே! உங்களுக்கு எனது உற்சாகக் கரகோஷத்தை எழுப்புகிறேன்.முதலில் ஒரு விசயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். "அவனருளாலே அவன் தாள்" பணிந்து என்று சிவபுராணத்தில் ஒரு வரி வரும். அதாவது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே அவனை வணங்கிட முடியும். இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால்.. ".

பல நேரங்களில் நாம் இதை அனுபவித்திருப்போம் , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ அல்லது கோவிலுக்கோ நாம் இத்தனை மணிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருப்போம் ஆனால் அப்படி செல்ல முடிவதில்லை. ச்சே.ச்சே.. இன்று போக முடியவில்லையே என்று பின் வருத்தப்பட்டிருப்போம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள் ளுங்கள்.." அது உங்கள் செயல் அல்ல. இறைவன் உங்களை தன் சந்நிதிக்கு வரவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான் அதனால்தான் சென்று உள்ளீர்கள் என்பது இதன் பொருள்

அதுபோல்தான் வெற்றியும். இவளும் ஒரு தேவதைதான்.

Image hosted by Photobucket.com


நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் அந்த வெற்றித் தேவதை உங்களை நோக்கி வரவேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்.

"என்னடா பாசிடிவ் ராமா புதிர் போட்டு குழப்புகிறாயே " என்றுதானே நினைக்கின்றீர்கள்!

(அது எப்படி ராமா கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.) "காக்கா நோக்கறியும் கொக்கு டப் அறியும்னு " ஒரு பல மொழியே உண்டுங்க! நானு கொக்குங்க!

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உங்கள் அன்பன் நான் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளேன்.இதை தற்பெருமைக்காக நான் சொல்ல வில்லை. பல பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டுள்ளேன். அன்பர் சுரேஷ் பாபு தன் வலைப்பூ கட்டுரையில் குறிப்பிட்டது போல எல்லா Work shop களிலும் ஒரே விசயத்தைதான் மாற்றி மாற்றி தருகிறார்கள். நம்பிக்கை குழுமத்தில் நம்ம டோஸ் டாக்டர் செந்தில் தந்த டோஸ் போல் இந்த டோஸ் , திரும்பத் திரும்ப நமக்கு தேவைதான். அது நம்மையும் அறியாது நம்முள் உரம் ஏற்றி விடும்.

சரி சரி விசயத்திற்கு வருகின்றேன், "வெற்றித் தேவதை என்னை நினைக்க வேண்டுமா? அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்வி நமக்கு எழுவதில் ஆச்சரியம் இல்லைதான்.

ரொம்ப ரகசியமான வழி ஒன்று உங்களுக்காகச் சொல்லுகிறேன்.

பேசாமல் வெற்றித் தேவதையை காதலியுங்கள்.



"..த்தோடா..இப்புடி சொல்லிட்டா எப்படி? காதல் கீதல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா " என்கிறீர்களா? ம் .. ம்.. இன்னா பாஸ் இதையெல்லாம் சொல்லியாத் தரணும்? கரும்புத்தின்ன கூலியா? இந்த கதைதான வேண்டாம்கிறது :-)

"சரி ,சரி நான் காதலிக்கிறது இருக்கட்டும் ! அந்த வெற்றித் தேவதை என்னைக் காதலிப்பாளா?"

ஆம் நண்பர்களே! நிச்சயம் அவள் உங்களைத் தேடித் தேடி வருவாள். அது உங்களோட உறுதியைப் பொருத்தது. உங்களோட பர்சனாலிட்டியைப் பொருத்தது.

பர்சனாலிட்டியா அது என்ன விலை? எங்கே கிடைக்கும் என்று என்னைக் கேட்டு விடாதீர்கள்.? காதலுக்கு கண் இல்லைங்க! நம்ம வெற்றித் தேவதையும் அப்படித்தான். அவ உங்களோட புற அழகை விரும்புவது இல்லை. உங்களோட அக அழகைத்தான் ரொம்பவே விரும்புவாள். உங்கள் அகம், அழகாக அழகாக புறமும் அழகாகிவிடும்.

இப்ப சொல்லுங்க! வெற்றித்தேவதையை காதலிக்க நான் ரெடி? நீங்க ரெடியா? :)

ஜெயம் தொடரும்...

12 Comments:

  • At 10:58 PM, Blogger வீ. எம் said…

    ஆரம்பமே கலக்கல் ராமா, அருமையாக உள்ளது ..தொடருங்கள்...

    ///வெற்றித்தேவதையை காதலிக்க நான் ரெடி??///

    உங்க வூட்டுகார அம்மா கிட்ட போட்டுத்தர நான் ரெடி, ஒதை வாங்க நீங்க ரெடியா??? :)
    ஆர்வமுடன்

    வீ எம்

     
  • At 12:07 PM, Blogger NambikkaiRAMA said…

    வீ.எம் என் வீட்ட்டுக்காரியே எனக்கு ஒரு வெற்றி தேவதைதான். உங்கள் கமெண்டை நன்கு ரசித்தேன்.

     
  • At 5:29 PM, Blogger labdab said…

    my best wishes for your unique and special effort

    paarthu, veetukara ammakita uthai vanngidaatheenga!!

    -labdab

     
  • At 12:05 PM, Blogger NambikkaiRAMA said…

    லப்டப் அவர்களே இப்போ எனக்கு டப் டப் ன்னு இதயம் ஒலிக்கிறது.

     
  • At 5:38 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    ராமா

    அழகா சொல்லியிருக்கீங்க... கொஞ்சம் கமர்ஷியல் நம்பிக்கைத் தொடர் போல தெரியுது. வாழ்த்துக்கள்...

     
  • At 5:45 PM, Blogger NambikkaiRAMA said…

    என் வலைப்பக்கம் வந்து தங்கள் கருத்தை பதித்தமைக்கு மிக்க நன்றி!
    கமர்ஷியல் என்றதின் பொருள் எனக்கு புரியவில்லை. காலத்திற்கு ஏற்ற என்று எடுத்துக்கொள்ளலாமா கணேஷ்.

     
  • At 6:05 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    // கமர்ஷியல் என்றதின் பொருள் எனக்கு புரியவில்லை காலத்திற்கு ஏற்ற என்று எடுத்துக்கொள்ளலாமா கணேஷ். //
    எடுத்துக் கொள்ளலாம் ராமா !! பொதுவாக நம்பிக்கை தொடர்களிலும் நீங்கள் எழுதுவது போல சுயமுன்னேற்றத் தொடர்களிலும் "..த்தோடா" "காதலியுங்கள்" போன்ற சொற்றொடர்கள் கையாளப்படுவதில்லை. "வெற்றித் தேவதையை காதலியுங்கள்." என்ற உங்கள் கருத்து எனக்கு கொஞ்சம் புதிதாகவே படுகிறது. "வெற்றி தேவதையை பிரார்த்தனை செய்யுங்கள்" , "வெற்றி தேவதையை நினைத்துக் கொள்ளுங்கள்" போன்ற சொற்றொடர்களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது எனக்கு புதியது.

    அதான் கமர்ஷியல் என்று சொன்னேன். இந்த காலத்திற்கு ஏற்ற எளிதாக சென்றடைய கூடிய கருத்துக்கள் என்ற நோக்கில்.

     
  • At 6:09 PM, Blogger NambikkaiRAMA said…

    கணேஷ்1 தங்களுடைய ஆக்கப்பூர்வமான பின்னோட்டத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றி!

     
  • At 6:27 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said…

    ராமா,

    நல்ல முயற்சி... இடைவெளி விட்டுவிடாமல் தொடருங்கள். (உங்களிடம் நான் வெளிப்படையாய் கேட்கவில்லை என்றாலும் இது போன்ற ஒரு சுயமுன்னேற்றத் தொடரை நீங்கள் எழுத வேண்டும் என வெகுகாலமாய் எதிர்பார்த்தேன்)

    //இந்த நிமிடம் இந்த உலகம் இந்த பிறப்பு மட்டுமே நமக்கு இப்போதைக்குச் சொந்தம். //

    இந்தக் கணத்தில் மட்டும் வாழ்வோம் என அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    //நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் அந்த வெற்றித் தேவதை உங்களை நோக்கி வரவேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்.//

    அதிர்ஷ்ட தேவதைக்கும் இதைத் தான் சொல்வார்கள் (அது இஷ்டப்பட்டு வருவதனால தான் அதிர்ஷ்ட தேவதை)

    ஃபயர் ஃபாக்ஸ் மூலமாய் பார்க்கும் போது உங்கள் வலைப்பூவை சரியாய் படிக்க முடியவில்லை. Templateல் அல்லது இந்தப் பதிவில் எங்காவது align="justify" இருக்கிறதா என்று பார்த்து நீக்கிவிடவும்.

     
  • At 6:47 PM, Blogger NambikkaiRAMA said…

    தங்கள் விமர்சனத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி கோபி! வாரம் ஒருமுறை இத்தொடரை பதியலாம் என உள்ளேன். இதன் தொடர்ச்சியை நாளை காணலாம். எல்லாம் உங்கள் மனமெனும் மாயாஜாலம் இன்ஸ்பிரேஷன்தான்.

     
  • At 8:21 PM, Blogger எம்.கே.குமார் said…

    அன்பு பாஸிட்டிவ் ராமா,
    நல்ல முயற்சியாக இருக்கிறது.

    ஜெயமடையட்டும் எல்லோரும்!

    கலக்குங்கள்.

    எம்.கே.

     
  • At 12:22 PM, Blogger NambikkaiRAMA said…

    எம்.கே! என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!
    போட்டோவில் சூப்பரா போஸ் கொடுக்கிறேள் :)

     

Post a Comment

<< Home