சக்தி கொடு தாயே!
முகம் காணில் சிரித்து
முதுகினில் குத்தும் - இது
போட்டி நிறை உலகமப்பா
பொறாமைகள் ஜாஸ்தியப்பா!
வீட்டினிலே நீ கிடந்தால்
வெற்றி காண முடியாதப்பா - தமிழ்ப்
பாட்டினிலே சொல்கின்றேன்
இலட்சியம் நீ கொள்ளப்பா!
கூட்டினிலே அடைபட்ட
கிளியாய் தான் இருக்காதே
கூவமாய் மனதில் எண்ணம்
கூடிவிடும் பின் வருந்தாதே!
சல்லடை என்ன செய்யும்
சருகுகளை தேக்கி வைக்கும்
அறமான முறமோ அவற்றை
எல்லாம் வீசி விடும்.
முறமாய் இருந் திடுவாய்
இடர்களை களைந்திடுவாய்!
வரமாய் இறைவன் தந்த- உன்
வாலிபத்தை பயன் செய்வாய்!
காமத்தில் வாழ்ந்து விட்டால்
கடைந்தேறல் மிகக் கடினம்
யோகத்தைப் பெற வேண்டும்
யோசிப்பாய் என் கருத்தை.
காலத்தை அறிந்திட்டால்
காலனையும் வென்றிடலாம்
ஞானத்தை உணர்ந்திட்டால்
ஞாலமே உன்னைப் போற்றும்!
வீரம் விளைந்த மண்ணில்
வேந்தனே நீ பிறந்தாய் - உன்
கோலம் உணர்ந்து விடு
கோமானாய் ஆகி விடு.
விரல்கள் பத்தும் உன்
வெற்றிக்கு மூலதனம் எனும்
குரல்கள் ஒலிக்கட்டும்
குவலயம் உனக்கடிமை யாகும்!
சூலம் பிடித்த சக்தி
ஓம் காளி! ஜெய் காளி!
வீரம் தந்து விடு
வெற்றி பெற சக்தி கொடு!
1 Comments:
At 11:32 PM, rnatesan said…
என்ன ராம பக்தரே,
காளிக்கிட்ட வந்துட்டீங்க!!ஓ! எல்லா தெய்வமும் ஒண்ணுதான் என்கிறீர்களா!
Post a Comment
<< Home