
வணக்கம் நண்பர்களே! புதுசா ஒண்ணும் நான் சொல்லப் போறதில்லை எல்லாருக்கும் தெரிஞ்ச விசயத்தைதான் எழுதப் போறேன். அதுவும் சுத்தமான டமில்ல எழுதப்போறேன் மருத்துவர் அய்யா தார் ஊத்துறதுக்கு முன்னேயே படிச்சிடுங்க. எனது அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்குது...வீடு போரூரில் இருக்குது...ஆபீஸ்க்கு பஸ்சில் போய் வருவதுதான் வழக்கம். பைக்கில் போனா 1 மணி நேர பயணத்தில் நீங்கள் ஆபீஸ்க்கு போயாக முடியாது..பேயாகத்தான் வேண்டியிருக்கும். என்னடா சொல்லுறான் பார்க்குறீங்களா? போக்குவரத்து நெரிசல்ல எல்லா குப்பையும், மாநகரப்பேருந்து ஊதித் தள்ளும் சாம்பிராணி(?) புகையும் நம்மமேல வந்து விழுந்து நாம ரொம்ப அழகாயிடுவோம்னா சொல்ல முடியும்?
பஸ்சுக்குள்ளேயும் இதே சிக்கல்தான்.. இப்போ பெட்ரோல் விலை ஏத்திட்டானுங்க(புலி வருது வருதுன்னு வந்தே போய்ச்சு)..உங்க காசை மிச்சம் பிடிகனும்னா..பஸ்தான் பெஸ்ட்.!.என்னடான்னு திரும்பவும் கேட்குறீங்களா?..உங்களுக்கு அயர்ன் பண்ற செலவு மிச்சம்ங்க.!.டிராவல் செலவு மிச்ச்ம்னு சொல்லுவான்னு பார்த்தா அயர்ன் செலவுன்னு சொல்றான்னு நீங்க் கேட்கிறது என் காதிலே விழுது..மேல படியுங்க கூட்ட நெரிசல்ல அயர்ன் பண்ணுன சட்டையைப் போட்டுட்டு போனா..திரும்பவும் நீங்க அயர்ன் பண்ண வேண்டிருக்கும்..அதே சமயம் நம்ம பிர்ன்சிபலை(அயர்ன் பண்ணாமல்) பாலோ பண்ணி பாருங்க ..உண்மை புரியும். இன்னோரு லாபம் என்னான்னா பிசியோதெரபிகிட்ட போய் உங்க பிராபளத்தை சொல்லி தினமும் ரூ100, 200 ன்னு அழ வேண்டாம். பேசாம நம்ம மாநகர் பேருந்துல ஏறுங்க..உங்க பிராபளத்துக்கு ஏத்த மாதிரி நில்லுங்க..மக்கள் கூட்டமே உங்களுக்கு சுளுக்கு எடுத்து விட்டுடும்..மாறி போய் லேடிஸ் பக்கம் நின்னுடாதீங்க ..சுளுக்கு பிரச்சனை ஜாஸ்தியாகிடப் போவுது..
இந்த பஸ்ல நம்ம "உட்கார்த்துனர்" பண்ணுற வேலை இருக்கே..அதாங்க நடத்துனரைதான் அப்பிடி சொன்னேன் அவர் உட்கார்ந்தேதான இருக்காரு..ம்..ம்...ம் அவரோட வேலைதான் உலகத்திலேயே உசத்தியான வேலை. நாம கலெக்ட்ரா இருந்தாலும் அவர் சொன்னதுக்கு கட்டுப்பட்டாகனும்..இல்லேன்னா யூனியனைக் கூட்டிருவேன்னு மிரட்டிருவாரு.....சில்லற பைசா மட்டும் நாம கரெக்டா கொண்டு போகலைன்னு வச்சுக்கோங்க அவர் உங்களைப் பார்க்கிற ஒரு அலட்சியப் பார்வை இருக்கே..அது எப்படி இருக்கும் தெரியுமா..நம்ம ஜெயகாந்தன் கிட்ட கேட்டா நல்ல வசனம் எழுதி தருவார். அந்த 50 பைசா சில்லறைக்கு நாம 1 மணி நேரத்துக்கு மேல உட்கார்த்துனரை பார்த்து தவம் கிடக்கனும். அவரை நாம் பார்க்க..அவர் நம்மல (எதோ கொலை குற்றம் பண்ணுனவனைப் பார்ப்பது போல்)பார்க்க..கிட்ட ஏதும் வயசு பொண்ணுங்க நின்னுட்டா அவர் அடிக்கிற கமெண்டும் அவ்ளோதான்..நம்ம தன்மானம் அந்த 50 பைசா சில்லரையை மறக்கவும் முடியாம கேட்கவும் முடியாம..ஸ்டாப்புல இறங்க வேண்டியிருக்கும்.
ஏனுங்க 10 பைசா சில்லறை தராததினாலே நுகவோர்கோர்ட்டுல கேஸ் போட்டு 1000 ரூபாய்க்கு மேல சம்பாத்தியம் பண்றானுங்கன்னு சொல்றாங்களே அதெல்லாம் நெசந்தாங்களா?..அது எப்படின்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்,..ம் ம் கிட்ட தட்ட ஒரு 20000ரூபாய் கிட்ட சம்பாத்தியம் பண்ணிருக்கலாம். மிஸ் பண்ணிட்டேன்.
அப்புறம் உங்களுக்கு MLA , MBBS சீட்டுக்கூட ஈசியா கிடைச்சிரும் ஆனா பஸ்ல உட்காரதுக்கு சீட்டு கிடைக்கனும்னா நீங்க போன பிறவியில புண்ணியம் பண்ணி இருக்கனும். சீட்டுக்காக பஸ்சுக்குள்ளே ஒவ்வொருத்தரும் அடிச்சிக்கிற அடி இருக்கே ..அனேகமா நம்ம அரசியல்வாதிங்க எல்லாம் இங்கேதான் பயிற்சி எடுத்திருப்பாங்களோன்னு தோணுது.

போதாத குறைக்கு நம்ம டிரைவரு இருக்காரே..என்னடா எவனுமே நம்மள கண்டுக்க மாட்டுக்கிறானேன்னு அவர் புடிக்கிற ஒரு சடன் பிரேக் இருக்கு பாருங்க ..நம்ம குரல்வளையை அப்படியே நண்டு கவ்ன மாதிரி இருக்கும். சுனாமி அலைமாதிரி நெரிசல் அப்படியே முன்னே வந்து அப்புறம் பின்னே போகி ஒரு அசை அசைந்து நிற்கும் பாருங்க. குயின்ஸ் லாண்ட், எம்.ஜி.எம் செயண்ட் வீலை விட் அது சூப்பரு எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். வைரமுத்து, ” வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லா ஒரு உருண்டையும் உருளுதடின்னு” பாடுனார்ரே அந்த பீலிங்கு வேணும்னா லவ் பண்ண வேண்டாம் நம்ம சென்னை மாநகரப் பேருந்துல ஏறுனா போதும்.
அதுவும் பாருங்க எந்த டிரைவரும் பஸ்ஸை ஸ்டாப்புல நிப்பாட்ட மாட்டாங்க. எங்க நிப்பாட்டுவாங்கன்னு கண்டுபிடிக்கிறதே ஒரு தனி டெக்னிக். பஸ்சுக்குள்ள ஏறுதுக்கோ இல்லே இறங்குதுக்கோ நீங்க கஷ்டப்படவே வேண்டாம். எல்லாமே ஆட்டோமெட்டிக்தான். படிக்கிட்ட போய் நின்னுக்கோங்க ..நம்ம மக்களே நம்மள உள்ளே தள்ளிடுவாங்க. உள்ளேன்னா பஸ்சுக்குள்ளேதான் சொல்றேனுங்க. ஆனா ஒண்ணுங்க சென்னைக்கு நீங்க புதுசா வர்றீங்கன்னா ஒரு அட்வைஸ்..கண்டிப்பா லக்கேஜ் கொண்டுவராதீங்க..கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுத்திடுங்க. நீங்க பஸ்ல ஏறாட்டியும் பஸ் உங்க மேல ஏறுதுக்கு சான்ஸ் இருக்குது. ஆரம்பத்துல எனக்கு இந்த பயணம் கஷ்ட்மா இருந்திச்சு இப்போ பழகிப்போச்சு.
பாவம் இந்த ஸ்கூல் பசங்க படுற அவஸ்தைதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. அவங்க என்னா பாவம் பண்ணுனாங்கன்னு இப்படி கவர்மண்ட் பொதி சுமக்க வைக்கிறது. இனி வளருர குழந்தைங்க கூனோடத்தான் வளருவாங்கன்னு ஆய்வு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணும் இல்லேங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..பணக்கார பசங்களுக்கு பிரச்சனையில்லை..அவங்க பொதியை காரே சுமந்திடும். இவங்க பொதியை யாருங்க சுமக்குறது? "கையில பேக் புடிச்சுக்கிட்டு நம்ம புள்ள போய்ச்சுதே! எப்போ வருமோ?"ன்னு பெத்தவங்க உயிர புடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். இந்தப் பிரச்சனையை நாம எப்படியாவது தீர்க்கனும்..ஒண்ணு பஸ் எண்ணிக்கையை ஜாஸ்தியாக்கனும்.. இரண்டு ஸ்கூல் பசங்க பாடச் சுமையை குறைக்கனும்.
இந்தா பாருங்க ..எதையும் நான் இங்கே எடிட் பண்ணல மனசுல வந்ததை அப்படியே டைப் பண்ணிட்டேன். நான் ஒன்னும் பெரிய எழுத்தாளன் கிடையாதுங்க ..நல்லா எழுதுற வலைப்பூ நண்பர்கள் நீங்க இந்தப் பிரச்சனையை நல்ல படியா எழுதி ஒரு தீர்வை சொல்லுவீங்கன்னு நம்பிக்கையில இதை எழுதிட்டேனுங்க..சரி சரி பஸ்சுக்கு நேரமாச்சு வரட்டா…!