வெற்றி நமதே!

*
முடியும் முடியும்
என்று சொன்னால்
உன்னால் முடியும் பாரடா!
*
விடியும் என்று
நம்பி இருந்தால்
நிச்சயம் விடியும் கேளடா!
*
உண்மை உழைப்பு
ஊக்கம் உயர்வை
உணர்ந்து நீயும் பாரடா!
*
காட்சி இனிக்கும்
கவலை பறக்கும்- கைக்
கொள்வாய் இதைக் கேளடா!
*
மரமாய் விலங்காய்
மண்ணில் மட்கிடவா
மானிடா நீயும் அவதரித்தாய்?
*
ஆறறிவு உடைய
மனிதா இதை
உணர்ந்தால் உனக்கே வெற்றியன்றோ!
*
அதிர்ஷ்டம் நம்பி
தினமும் வெம்பி
கரையேர நீ காத்திருந்தால்..
*
காலம் உன்னைக்
கொன்று விடும் – இது
ஞாலம் கண்ட உண்மையன்றோ!
*
வீணில் வெட்கி
தலை குனிந்திடவா- இவ்
விந்தையுலகில் நீ பிறந்தாய்?
*
மானிடம் தழைக்க
வந்தவன் நீ
மாபெரும் சாதனை ஆற்றிடவா!
*
இன்பம் துன்பம்
இரண்டையும் ரசிக்கும்
இதயத்தை நீ பெற்றிடுவாய்?
*
கோபம் என்னும்
கொடிய விஷத்தை
முழுமையாகக் கொன்றிடுவாய்?
*
வானம் போற்றும்
தலைவனாய் ஆக
வாலிபம் முதலே முயன்றிடுவாய்!
*
பேரும் புகழும்
உனக்கே சொந்தம்
பேரறிவாளனே வந்திடுவாய்!
*
சுதந்திர மூச்சை
சுவாசிப் பவனே
சுந்தரமானவன் நீ அன்றோ!
*
இம் மாபெரும் மண்ணில்
மகாத்மா ஆகி - வாழ்வதே
நமக்குப் பெருமையன்றோ!
*
ஆதலின் சீரிய
சிந்தனை கொண்டு - செயல்
ஆற்றிட நீ வா நண்பா!
*
வெற்றி! வெற்றி!
வெற்றி! என்றே
வெற்றி முழக்கம் செய்திடுவாய்!
*
நம்பி கை வை
நம்பிக்கை வை!
நிச்சயம் நமக்கே வெற்றியன்றோ!
*